அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்க.. திமுக கூட்டணி எம்எல்ஏவை திடீரென சந்தித்த ஓஎஸ் மணியன்
நாகப்பட்டினம்: அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்க என்று திமுக கூட்டணியை சேர்ந்த கீழ்வேளூர் சட்டசபை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலியை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக திமுக, அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இப்போதே வியூகம் வகுக்க தொடங்கிவிட்டன.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தை புதிதாக தொடங்கி உள்ள விஜயும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இதனால் விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் என்பது சூடுபிடிக்க தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நாகை மாலியை சந்தித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஓஎஸ் மணியன் ஆதரவு கோரியுள்ளார்.
ஓஎஸ் மணியன் 2வது முறையாக நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாகையில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி அவர் தலைமையில் அந்த கட்சியின் ‛திண்ணை பிரசாரம்' மேற்கொண்டனர். இந்த பிரசாரத்தின்போது தமிழக மக்களுக்காக முந்தைய அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாகவும், கடைகளுக்கும் வழங்கி வந்தனர்.
அப்போது ஹோட்டல் ஒன்றில் ஓஎஸ் மணியன் மற்றும் அதிமுகவினர் நுழைந்தனர். அப்போது அங்கு கீழ்வேளூர் சட்டசபை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவாக நாகை மாலி இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. இப்படியான சூழலில் ஓஎஸ் மணியன் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை நாகை மாலி எம்எல்ஏவிடம் வழங்கியதோடு, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இவர்கள் 2 பேரும் எதார்த்தமாக ஹோட்டலில் சந்தித்து கொண்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தனது கூட்டணியை தக்க வைக்க நினைக்கிறது. ஆனால் கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு திமுக மீது அதிருப்தி உள்ளது. இதனால் தற்போதைய கூட்டணி 2026 தேர்தலில் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபுறம் திமுகவை வீழ்த்த அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக வலுவான கூட்டணி அமைக்க வியூகம் வகுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள விஜயை அதிமுக கூட்டணிக்குள் இழுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமாட தயாராகி வருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications