நாகை அருகே பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை.. சடலத்தை ஏரியில் வீசியதால் பரபரப்பு
Recommended Video
நாகை: நாகை அருகே பாஜக நிர்வாகி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் காமேஸ்வரம் அருகே உள்ள கீரன் ஏரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதந்தது. இதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் காண முயற்சித்தனர். அப்போது இறந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் திருப்பூண்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என தெரியவந்தது.

அவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதையும் கண்டறிந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சமூக விரோதிகளால் செந்தில் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ள பாஜகவினர், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வேளாங்கண்ணி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கீழையூர் போலிசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications