பச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே!
பாரதியாருக்கு காவி நிற தலைப்பாகை குறித்து எல் கணேசன் கருத்து கூறியுள்ளார்.
நாகை: எச்.ராஜாவே பரவாயில்லையே போலிருக்கே.. பாரதியாரின் தலைப்பாகை ஓவியரின் கற்பனை என்றார். ஆனால் இல.கணேசனோ, பாரதியார் கோட் பச்சை கலரில் இருக்கிறதே.. அதை பத்தி ஏன் யாருமே கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நமக்கு வெள்ளை கலரிலேயே பார்த்து பழகிப்போன பாரதியாரின் தலைப்பாகை, காவி நிறமானதும் சர்ச்சையானது. இது எதேச்சையானது என்றது பள்ளிக்கல்விதுறை! இது ஒரு கற்பனை ஓவியம் என்றார் எச்.ராஜா!

ஆனால் பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய யெற்குழு உறுப்பினருமான இல கணேசன், காவி நிற தலைப்பாகைக்கு விளக்கம் சொல்லாமல், பாரதியின் கோட் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலுக்கு இல கணேசன் சாமி கும்பிட வந்தார். பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது:
"இப்ப இருக்கிற இளைஞர்களுக்கு தமிழே தெரியாத நிலை உள்ளது. இதில், கல்விக்கொள்கையில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை கூட புரிந்துகொள்ளாமல் எதிர்கட்சிகள் பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. புதிய கல்விக் கொள்கையில் இந்தி விருப்பப் பாடமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருக்கிறதா சொன்னவங்க.. அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது பற்றி ஏன் யாருமே இதுவரைக்கும் கேள்வி எழுப்பவில்லை" என்று கூறினார்.
பாரதியாருக்கு பச்சை கலர் கோட் போட்டிருப்பதை இல கணேசன் வலிந்து சொல்ல காரணம் தெரியவில்லை. அதே சமயத்தில் பச்சை கலரை குறிப்பிட்டு சொல்லும் இல கணேசனுக்கு ஏன் வெள்ளை கலர் தெரியாமல் போனதும் என்றும் தெரியவில்லை!
ஆக மொத்தத்தில் ஆளாளுக்கு பாரதியாருக்கும் இப்போது கலர் பூச ஆரம்பித்து விட்டனர்.
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி.. இது பாரதியார் பாடிய பாடல்தான்.. கலர் பூசி அவரை களங்கப்படுத்தாம.. அவரை அவர் பாட்டுக்கு இருக்க விடுங்கப்பா.. நல்லதாப் போச்சு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications