கர்நாடகாவுக்கு கேட்டுச்சோ இல்லையே..கடவுளுக்கு கேட்டுருச்சு! கடைமடை வந்த காவிரி! விவசாயிகள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட காவிரி நீர், காவிரியின் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டம், கீழையூர் அருகே உள்ள ஏர்வைக்காடு கதவணையை வந்தடைந்தது. இதையடுத்து கதவணையில் இருந்து விவசாயப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் நாகை மாவட்ட காவிரி கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருக்கும்போது, காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். வழக்கமாக சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

Cauvery Delta Mettur Dam

இந்த நிலையில், நடப்பாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

குறுவை சாகுபடி

இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனிடையே, செப்டம்பர் 1-ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பு

அணையில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அன்று மாலையே நீர்வரத்து அதிகரித்ததால் நீர் திறப்பு 4000 கனடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் 7000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஐந்து நாட்களாக காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 10,000ல் இருந்து 12,000 கன அடை வரை அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடைமடை

​வழக்கமாக மேட்டூர் அணை திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் கடைமடைக்கு நீர் வந்து சேரும் நிலையில், இந்த ஆண்டு 2 வாரங்கள் கடந்து தாமதமாகவே வந்துள்ளது. சம்பா சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க, மேட்டூரிலிருந்து கூடுதலாக 15,000 முதல் 20,000 கன அடி வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து, அனைத்துப் பாசன வாய்க்கால்களின் கடைக்கோடிப் பகுதி வரை தண்ணீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.


​
ஏர்வைக்காடு கதவணை

சாகுபடிக்காக 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஒருபோக சம்பா பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் விவசாயிகளின் தேவைக்கேற்ப முறையான நீர் பங்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். ​ஏர்வைக்காடு கதவணை மூலம் கீழையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 28,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கர்நாடக அரசு

தண்ணீர் வரத்து தாமதமாகியுள்ள போதிலும், அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டுத் தங்களுக்கு முழுமையாக நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறக்கவே முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், இயற்கையின் கொடையால் தண்ணீர் வரத்து அதிகரித்து தற்போது கடைமடைக்கு காவிரி வந்து சேர்ந்துள்ளது என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+