விபத்தில் சிக்கியவர் விரலை தேடிய நேரத்தில்.. அவரின் செல்போனை திருடிய நபர்... ஷாக் சிசிடிவி காட்சி
நாகப்பட்டினம்: நாகை அருகே சாலை விதியை மீறி வந்த லாரியால் அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது ஆட்டோ நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கிய நபர் துண்டான விரலை தேடும் நேரத்தில் அவருடைய செல்போனை திருடி செல்பவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Recommended Video
நாகை அடுத்த நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகும். இந்த நிலையில் நாகையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரி சாலை விதியை மீறி வலது பக்கம் சென்றதால், எதிர் திசையில் நாகை நோக்கி சென்ற ஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் விரல் துண்டான நிலையில், விரலை சாலையில் அவர் தேடி கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்தவர், செல்போனை திருடி சென்றார். அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், விபத்து நடந்த இடத்திற்கு எதார்த்தமாக அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வரும் காவலர், போக்குவரத்தை சீர் செய்யாமல் எதுவும் தெரியாதது போல வேடிக்கை பார்த்துகொண்டு கடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications