வேளாங்கண்ணி தேவாலயத்தில்.. விஜய் ரசிகர்கள் செய்த செயல்! கொந்தளித்த அருட்தந்தை!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: விஜய் ரசிகர்கள் பொது இடங்களில் 'TVK' என முழக்கமிட்டு வருவது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. நேற்று வேளாங்கண்ணி தேவாலயத்தில் விஜய் ரசிகர்கள் இப்படி கோஷம் போட்டிருந்தனர். இதற்கு தேவாலயம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

பாதிரியார் இந்த செயலை கண்டித்து பேசும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

Velankanni

அந்த வீடியோவில், "திருப்பணி தொடங்கிவிட்டது. அந்த நேரத்தில், அங்கு வந்திருந்த எல்லோருமே கோயிலின் உண்ணதத்தை புரிந்துக்கொள்ளாமல், ஜன்னல் மீது ஏறி நிற்பது, செல்போனில் வீடியோ எடுப்பது என.. மரியே வாழ்க என்று சொல்லக்கூடிய இடத்தில் கட்சியின் பெயரை உச்சரித்து செய்த செயல், ஊடகங்களில் வெட்ட வெளிச்சமாக காண்பித்திருக்கிறார்கள். இதை விட அசிங்கம் வேறு எதுவும் கிடையாது" என்று பாதிரியார் பேசியிருக்கிறார். இருப்பினும் இந்த வீடியோவின் உண்மை தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.

தேவாலயத்திற்குள் TVK கோஷம் போடப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவனை வழிபட வந்த இடத்தில், ஆர்ப்பாட்டம் அமைதியை கெடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது என பாதிரியார்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

முன்னதாக கொடைக்கானலிலும் விஜய் ரசிகர்கள் இப்படித்தான் செய்திருந்தார்கள். குணா குகை அருகே, ஒன்று திரண்ட விஜய் ரசிகர்கள் தவெக கொடியை கையில் பிடித்துக்கொண்டு, TVK.. TVK என கோஷம் போட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தேர்தல், குழந்தைகளின் எக்ஸாம், வேலை, அலுவலக பிரச்சனை, அரசியல் பிரச்சனை என எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு, கொஞ்சம் நிம்மதியாய் இருந்துவிட்டு போகலாம் என்று நினைத்துதான் பலரும் சுற்றுலாவுக்கு வருகிறார்கள்.

அங்கு வந்தும் 'TVK.. TVK' என கத்துவது எல்லாம் என்ன டிசைனோ! என சுற்றுலா பயணிகள் தலையில் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் மதுரை சித்திரை திருவிழாவிலும் இப்படித்தான் நடந்தது.

தவெக கொடியை பிடித்துக்கொண்டு சிலர் TVK.. TVK கோஷம் போட்டிருந்தனர். சித்திரை திருவிழாவில் இப்படி எந்த கட்சிக்காரர்களும் கொடி பிடித்துக்கொண்டு தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டது கிடையாது. ஆனால், தவெகவினர் மட்டும் பொது ஒழுங்கை மீறி, பக்தர்கள் பங்கேற்ற விழாவில் கட்சிக் கொடியை பிடித்த கோஷம் போட்டது எல்லாம் சிவிக் சென்ஸ் இல்லாத செயல் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. விஜய் இதையெல்லாம் ஒழுங்குப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+