கஜாவை விட தீவிரம் காட்டும் முருகன்.. சோர்வு இல்லாமல் மின் இணைப்புகளை சரி செய்யும் சூப்பர் ஹீரோ!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சோர்வு இல்லாமல் மின் இணைப்புகளை சரி செய்யும் சூப்பர் ஹீரோ!-வீடியோ

    நாகை: கஜா புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் மின் இணைப்புகளை சரி செய்ய சென்ற சென்னையை சேர்ந்த முருகன் துரிதமாக செய்து வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன் தினம் இரவு கரையை கடக்க தொடங்கியது. பின்னர் நேற்று காலை கரையை கடந்தது.

    Chennai Murugan involved in EB post rectifying process

    இது டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு, தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    நாகை, வேதாரண்யம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மரங்கள் விழுந்தன. மேலும் மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.

    இதனால் பல்வேறு வெளிமாவட்டங்களிலிருந்து மின் வாரிய ஊழியர்கள் புயல் பாதித்த இடங்களுக்கு சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் ஓய்வு பெற்ற ஊழியர் பாலசுப்பிரமணியன் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் மின் இணைப்புகளை சரி செய்யும் பணிகளை செய்து வந்தார்.

    இந்நிலையில் சென்னையைச் சேர்ந்தவர் லைன்மேன் முருகன். இவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மின் இணைப்புகளை சரி செய்யும் பணிக்கு நேற்று இரவு சென்றார். நள்ளிரவு 3 மணிக்கு வந்த அவர் சிறிதும் ஓய்வெடுக்காமல் காலை 6 மணிக்கு மின் கம்பங்களை சரி செய்யும் பணியை செய்து வருகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+