வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய சீன படகு! உள்ளே இருந்ததைப் பார்த்து போலீசார் ஷாக்! விசாரணை தீவிரம்
நாகை: வெளிநாட்டுப் படகு ஒன்று வேதாரண்யம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் எல்லைப் பகுதிகள் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. அண்டை நாடுகளில் இருந்து இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்ற வருகின்றனர்.
இந்த ஊடுருவல் முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

கரை ஒதுங்கிய படகு
இதற்கிடையே நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்காடு என்ற பகுதியில் திடீரென படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி இருப்பதை முதலில் அப்பகுதி மக்கள் கவனித்து உள்ளனர், இதையடுத்து அவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் படையினருக்கு இது தொடர்பாகத் தகவல் கொடுத்து உள்ளனர்.

சீனா
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் ரப்பர் படகைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அது சீனாவில் தயாரிக்கப்பட்ட படகு என்பதோ போலீசார் கண்டறிந்தனர். கரை ஒதுங்கி அந்த ரப்பர் படகு 13 அடி நீளமும், 3 அடி அகலம் கொண்டதாக உள்ளது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் தஞ்சை சரக டி.ஜ.ஜீ கயல்விழி உள்ளிட்ட முக்கிய அக்காரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இலங்கை
அந்த ரப்பர் படகு சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் கூட, அதில் இலங்கை நாட்டில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல், காலணிகள் மற்றும் துடுப்பு ஆகியவற்றை போலீசார் கண்டறிந்து உள்ளனர். இதையடுத்து நாகையில் இருந்து மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. படகை மோப்பம் பிடித்து அந்த நாய், அருகே இருக்கும் காட்டுப் பகுதிக்குள் நுழைந்து. இருப்பினும் யாரையும் பிடிக்கவில்லை.

விசாரணை
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யம் கடற்கரை பகுதியில் வெளிநாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்குவது இதுவே முதல்முறையாகும். நாட்டில் நாச வேலை செய்ய வெளிநாட்டினர் நாட்டில் நுழைந்து உள்ளனரா அல்லது கடத்தல்காரர்கள் இந்த படகைப் பயன்படுத்தி உள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகதிகள்?
இலங்கையில் இப்போது மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வழிவகுத்து உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட கடுமையான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே இலங்கையில் இருந்து சில குடும்பங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இதனால் அதேபோல யாரேனும் தஞ்சமடையப் பயன்படுத்திய படகா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications