விக்ரம் ஸ்டைலில் புதைக்கப்பட்ட மெத்? தவெக நிர்வாகி வீட்டு தோட்டத்தில் சல்லடை போடும் DRI! பரபர நாகை!
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் வருவாய் புலனாய்வு குற்றப்பிரிவு போலீசாரால், மெத்தபெட்டமைன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பூமிக்கு அடியில் மெத் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தவெக நிர்வாகி பூபாலன் வீட்டின் தோட்டத்தில் வருவாய் புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கடத்துவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு துறை திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த பைனான்சியரான சுகன் என்பவர் வீட்டிற்கு வந்த மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட 27 பாக்கெட்டுகளில் மெத்தபட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 135 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 135 கோடி என்கின்றனர் அதிகாரிகள். தொடர்ந்து போதைப்பொருள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர் மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள்.
தொடர் விசாரணைக்கு பிறகு இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நாகை மாவட்ட தவெக பிரமுகர் வழக்கறிஞருமான பூபாலன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி சுகன் போன்றவர்கள் மூலம் நாகையிலிருந்து இலங்கைக்கு பல ஆண்டுகளாக போதை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட நிலையில் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பூபாலன் வீட்டின் தோட்டத்தில் அமைந்துள்ள குட்டையில் உள்ள நீரை இறைத்து DRI போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பூபாலன் கைது செய்யப்பட்டு ஒரு மாதம்ள் ஆகியுள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மெத் போதை பொருளை பூமிக்கு அடியில் புதைத்து வைத்து இருப்பதாக பூபாலன் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




Click it and Unblock the Notifications
