நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூடும் யானை பலம்.. நாகையில் கடல் மட்டம் உயரும்..தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாகையில் கடல் மட்டம் உயரும், தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்- வீடியோ

    நாகை: கஜா புயல் வலுவடைந்து வருவதால், நாகையில் கடல் மட்டம் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலினால் பாதிக்கப்பட கூடிய 38 கிராமங்களை சேர்ந்த 87 ஆயிரம் மக்களை பாதுக்காப்பான இடங்களுக்கு வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    கஜா புயல் வலுவடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மைச் செயலருமான தென்காசி ஜவஹர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    Gaja cyclone becomes more stronger

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்காசி ஜவகர், புயல் வலுவடைந்து வருவதால் நாளை நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றார்.

    அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், கஜா புயல் வலுவடைந்து வருவதால் நாகையில் கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும், புயலினால் பாதிக்கப்பட கூடிய சீர்காழி, நாகை வேதாரண்யம் கோடியக்கரை உள்ளிட்ட 38 கிராமங்களை சேர்ந்த 87 ஆயிரம் மக்களை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.

    மேலும் புயல் பாதிப்பில் சிக்கிக் கொள்ளும் மக்கள் அவசரகால உதவியை பெற 1077 என்ற மாநில முழுவதுமான பொது எண்ணையும் நாகை மாவட்டத்திற்கான 04365251992 எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Gaja cyclone becomes stronger as it makes the level of the Nagappattinam coast high.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X