சுனாமிக்கு பின் பெரிய பேரிடர்.. நாகை, அதிராம்பட்டினத்தை சூறையாடிய கஜா புயல்.. பெரும் சேதம்!
2004 சுனாமிக்கு அடுத்து கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

நாகை: 2004 சுனாமிக்கு அடுத்து கஜா புயல் நாகை மற்றும் அதிராம்பட்டினத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஜா புயல் மொத்த தமிழகத்தையே முடக்கி போட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.

எதிர்பார்க்கவில்லை
இந்த புயல் பாம்பன் மற்றும் கடலூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளை அதிகம் தாக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்டா மாவட்டங்களை அதிகம் தாக்கியது. கடைசி நேரத்தில் திசை மாறிய கஜா புயல், வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

மோசமான நாகை
நாகப்பட்டினத்தில் இந்த கஜா புயல் 108 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதனால் பெரும்பாலான மரங்கள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. புராதன கட்டிடங்கள், வீடுகள் நிறைய இடிந்து விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மழை வேறு பெய்த காரணத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பாதிப்பு
இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது அதிராம்பட்டினமும் வேதாரண்யமும்தான். அதிராம்பட்டினத்தில் இன்று காலை 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கு இருக்கும் பெரிய கட்டிடங்கள், குடிசைகள், பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுந்துள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
|
சுனாமியை போல பாதிப்பு
கஜா புயல் 2004 சுனாமிக்கு அடுத்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பலரின் வாழ்வாதாரம் மொத்தமாக நிலைகுலைந்து போய் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். வானிலை மைய அதிகாரிகள் அங்கு இன்னும் மழை பெய்யும் என்று வேறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications