H Raja: எதிரிகள் அழிந்து போகட்டும்.. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் ரகசியமாக யாகம் நடத்திய எச். ராஜா
வரும் தேர்தலில் வெற்றி பெற எச்.ராஜா சிறப்பு யாகம் நடத்தினார்.
Recommended Video

நாகை: எதிரிகள் அழிந்தே போகட்டும்.. என்பதற்கான யாகத்தைதான் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்திருக்கிறார்... அதுவும் ரகசியமாக!
"ஆன்மீக நம்பிக்கை இருந்திருந்தால் இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்திருக்க மாட்டார்" என்று கந்துவட்டியால் குடும்பமே தீக்குளித்ததை கண்டு சொன்னவர்தான் எச். ராஜா!
செத்து போன இசக்கி முத்துவுக்கே ஆன்மீக காரணம் சொன்னவர் எச்.ராஜா. அப்படி இருக்கும்போது, தன்னை நம்பி கட்சியில் ஒரு தொகுதியையே ஒதுக்கி தந்துள்ள நிலையில், பக்தியில் ஈடுபாடு அளவுக்கு அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.

நல்ல நேரம்
நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்ததை அடுத்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 20-ம் தேதி தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்ற எச்.ராஜா, யாகம் ஒன்றினை நடத்தினார். அந்த யாகத்தில் 3 மணி நேரம் கலந்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

சிக்கல் கோயில்
இந்நிலையில், நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோயிலிலும் எச்.ராஜா சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார். இந்த யாகங்களின் பெயர்தான் சத்ரு சம்ஹார யாகம். அதாவது எதிரிகளை வீழ்த்தவும், அழிக்கவும் நடத்தப்படுவதுதான் இந்த யாகத்தின் சிறப்பம்சமே!

ஒருசிலரே பங்கேற்பு
நேற்று அதிகாலை இங்கு எச்.ராஜா வந்திருக்கிறார். ஆனால் அவரது வருகை பாஜக பிரமுகர்களுக்கே தெரிவிக்கப்படவில்லையாம். அவ்வளவு ரகசியமாக யாகம் நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள். சிக்கல் பகுதியை சேர்ந்த ஒருசிலர்தான் வந்திருந்தார்களாம். ஆனால் அவர்களும் யாகத்தில் கலந்து கொள்ளவில்லையாம்.

வெளிவந்த போட்டோக்கள்
ரகசியமாக யாகம் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இது சம்பந்தமான போட்டோக்கள் எப்படியோ வெளியே வந்துவிட்டன. அதில், கோயிலுக்குள் யாகம் வளர்க்க.. அருகில் ஒரு பெட்ஷீட்டை விரித்து அதன் மேல் உட்கார்ந்திருக்கிறார் எச்.ராஜா.

பட்டு துண்டு, பட்டு வேட்டி
வெற்று உடம்பில் ஒரு துண்டை போர்த்தியபடி உள்ளார். பட்டு துண்டு, பட்டு வேட்டி அணிந்திருக்கிறார். யாகம் முடியும்போது எழுந்துநின்று இரு கைகூப்பி வணங்குகிறார். இறுதியாக குருக்கள் பிரசாதம் தந்ததும். அதை வாங்கி கொண்டு சிவகங்கைக்கு புறப்பட்டு சென்றுவிட்டாராம் எச்.ராஜா!
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications