முதல் வேட்பாளரானார் இடும்பாவனம் கார்த்திக்.. நாம் தமிழர் சார்பில் வேதாரண்யத்தில் போட்டி! பின்னணி
நாகப்பட்டினம்: அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் முதல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக் போட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேதாரண்யம் தொகுதி நிலவரம் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறலாம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.
இந்த முறை தமிழகத்தில் 4 முனை போட்டி என்பது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஆளும் திமுக கூட்டணி, அதிமுக + பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்று நான்கு முனை போட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் 2026 சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இடும்பாவனம் கார்த்திக் நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நாம் தமிழர் கட்சியில் சீமானின் நம்பிக்கை பெற்ற இளம் தலைவர்களில் ஒருவராக இடும்பாவனம் கார்த்திக் வலம் வருகிறார். இப்படியான சூழலில் நாம் தமிழர் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளராக அவரது பெயர் வெளியாகி உள்ளது.
இந்த வேதாரண்யம் சட்டசபை தொகுதியை எடுத்து கொண்டால் கடந்த 1962ம் ஆண்டு முதல் 2021 வரை மொத்தம் 14 சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக திமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய தேர்தல் முடிவுகளை பார்த்தால் கடந்த 2011 முதல் 2021 வரை தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது.
கடந்த 2021ல் அதிமுக சார்பில் என்வி காமராஜ், 2016, 2021ல் முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தற்போது வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் தான் உள்ளார். கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் ஓஎஸ் மணியன் மொத்தம் 78,719 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் எஸ்கே வேதரத்தினம் 66,390 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் ஓஎஸ் மணியன் 12,329 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3ம் இடம் பிடித்தது. நாம் தமிழர் கட்சி சார்பில் கே ராஜேந்திரன் வேட்பாளராக களமிறங்கினார். அவர் மொத்தம் 9,106 ஓட்டுகளை பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் வரும் 2016 சட்டசபை தேர்தலையொட்டி வேதாரண்யம் சட்டசபை தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications