Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாதவிடாய்" என கெஞ்சிய மாணவி.. நடவடிக்கை எடுக்காமல்.. நாகை பாஜக தலைவர் "சமரச பேச்சுவார்த்தை?"

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகையில் பாஜக மாவட்டத் தலைவருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியான நிலையில் அந்த மாணவியிடம் பாஜக மாவட்டத் தலைவர் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அடுத்துள்ள புத்தூர் பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கார்த்திகேயனின் மனைவி திருமலர் ராணி இந்த கல்லூரியின் செயலராக உள்ளார்.

இந்த நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் உடற்கூறுவியல் ஆசிரியராக பணிபுரிபவர் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்.

 மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொல்லை

மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொல்லை

இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மாணவிகளை தனது இச்சைக்கு பணியுமாறு மிரட்டி மிரட்டியே தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை கட்டாயப்படுத்தி உறவு கொள்வதையும் சதீஷ் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

ஆண் மாணவர்கள்

ஆண் மாணவர்கள்

அதிலும் இவர் பொறி, ஆண் மாணவர்களிடம் பேசும் மாணவிகள்தான். கல்லூரியில் மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ளக் கூடாது என்ற ஒரு விதியுள்ளது. அந்த விதியை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளதாம். இதையும் மீறி சில மாணவர்களுடன் பேசும் மாணவிகளை சதீஷ் பார்த்துவிட்டால் போதும், அந்த மாணவிகளை ஒவ்வொருவராக அழைத்து உன்னை கண்டிக்க வேண்டும் , நீ என் வீட்டுக்கு வா என ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியே வரசொல்வாராம்.

பாலியல் இச்சை

பாலியல் இச்சை

அங்கு அந்த மாணவிகளிடம் கண்டிப்பது போல் பேசி தனது பாலியல் இச்சையையும் தீர்த்துக் கொள்வார் என சொல்லப்படுகிறது. இவரால் நிறைய மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனராம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறார்களாம். அந்த வகையில் அண்மையில் இவர் ஒரு மாணவியை வீட்டுக்கு வருமாறு அழைக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

ஆடியோவில் சதீஷ்

ஆடியோவில் சதீஷ்

அந்த ஆடியோவில் சதீஷ் அந்த மாணவியிடம் உன் மீது ஒரு புகார் வந்திருக்கிறது. உன்னை விசாரிக்க வேண்டும். உடனே என் வீட்டுக்கு வா என்கிறார். அதற்கு அந்த மாணவி நான் காலேஜுக்கு வருகிறேன். அதெல்லாம் முடியாது என சதீஷ் மிரட்டுகிறார். உடன் அந்த மாணவி கெஞ்சியவாறு, சார் அதெல்லாம் வேண்டாம், என்னைவிட்டுவிடுங்கள் என கெஞ்சுகிறார்.

பீரியட்ஸ் வலி

பீரியட்ஸ் வலி

அப்படியும் விடாமல் நீ வீட்டுக்கு வந்துதான் ஆக வேண்டும் என மிரட்டுகிறார். என்ன செய்வது என தெரியாமல் அந்த மாணவி சார் எனக்கு பீரியட்ஸ் வலி இருக்கிறது. என்னால் வர முடியாது என்கிறார். அதையும் பொருட்படுத்தாத அந்த காமூகன், பரவாயில்லை நீ வா நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார். மேலும் ஏன்டா வரமாட்டேங்குறே, ஏன் பயப்படுறே என கொஞ்சி கொஞ்சி அந்த மாணவியை பிரைன்வாஷ் செய்கிறார். பிறகு மாத்திரை போட்டியா என கேட்கிறார். இப்படியாக இந்த அதிர வைக்கும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமரச பேச்சுவார்த்தை

சமரச பேச்சுவார்த்தை

இந்த செல்போன் ஆடியோவை தனது பெற்றோர் மூலம் அந்த மாணவி மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய நிலையில் அவர்கள் கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மாணவிகளை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவிகள் அந்த ஆசிரியர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. சதீஷ் மீதும் கட்டபஞ்சாயத்து செய்த கார்த்திகேயன் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+