மெத் வழக்கில் விரிவடையும் நெட்ஒர்க்! நாகை பைனான்சியரை தட்டித் தூக்கிய போலீஸ்! பரபர விசாரணை!

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் வருவாய் புலனாய்வு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவ்வழக்கில் 5வது குற்றவாளியாக ராஜ்குமார் என்பவரையும் கைது செய்துள்ளனர் போலீசார்.

நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கடத்துவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு துறை திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

Nagapattinam Methamphetamine DRI Drug

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த பைனான்சியரான சுகன் என்பவர் வீட்டிற்கு மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர்.

சுகன் லாட்ஜ் ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் நிலையில் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட 27 பாக்கெட்டுகளில் மெத்தபட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 135 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 135 கோடி என்கின்றனர் அதிகாரிகள்.

தொடர்ந்து போதைப்பொருள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணைக்கு பிறகு இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நாகை மாவட்ட தவெக பிரமுகர் வழக்கறிஞருமான பூபாலன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி சுகன் போன்றவர்கள் மூலம் நாகையிலிருந்து இலங்கைக்கு பல ஆண்டுகளாக போதை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட நிலையில் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்களிடம் சுமார் 24 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு இவர்கள் போதை பொருள் சப்ளை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என வருவாய் புலனாய் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த வகையில் நாகை மாவட்டம் பிரதாப ராமபுரம், யாதவர் தெருவை சேர்ந்த பூபாலனின் கூட்டாளி ராஜ்குமார் என்பவருக்கு மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பினர்.

திருச்சி டி.ஆர்.ஐ. அலுவலகத்தில் அக்டோபர் 23-ஆம் தேதி ஆஜராகுமாறு ராஜ்குமாருக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், வேளாங்கண்ணியில் லாட்ஜ் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார்.

போதைப்பொருள் கடத்துவதற்கு கார் வழங்கியதன் அடிப்படையில் இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில், மெத் கடத்தல் வழக்கில் ராஜ்குமார் 5வது நபராகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராஜ்குமார் நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+