"தம்பி.. அன்பு.." வெடித்து கதறிய சீமான்.. சடலத்தை தோளில் தூக்கி சென்ற பாசம்.. உலுக்கிய டிரைவர் மரணம்
சீமானின் கார் டிரைவர் அன்புசெழியன் மரணமடைந்தார்
Recommended Video

நாகப்பட்டினம்: "தம்பி.. அன்பு.." என்று சீமான் கதறி அழுததை பார்க்கவே எல்லோருக்கும் அடிவயிறு கலங்கிவிட்டது.. கார் டிரைவர் அன்புவின் மரணம் சீமானை நிலைகுலைய வைத்து விட்டது!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கார் டிரைவர்தான் அன்பு என்கிற அன்புசெழியன்.. நாகப்பட்டினம் மாவட்டம் எருக்கூர் அருகே உள்ள தில்லை பட்டினம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
அன்புதான் சீமானுக்கு கார் டிரைவர்.. பொதுக்கூட்டங்களுக்கு போவதாக இருந்தாலும் சரி.. கட்சி நிகழ்ச்சிக்கு போவதாக இருந்தாலும் சரி.. எல்லாமே அன்புதான்.. "அன்பு.. காரை எடுப்பா" என்றாலே சுறுசுறுப்பாகிவிடுவார் அன்பு.

உயிரிழப்பு
கொஞ்ச நாட்களாகவே அன்பு செழியனுக்கு உடம்பு சரியில்லை.. அதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்துவிட்டார். அன்புவின் மரண செய்தி கேட்டதும் சீமான் அதிர்ச்சி அடைந்தார்.. அவர் மட்டுமில்லை.. மொத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இது அதிர்ச்சிதான்.. செய்தி காதில் விழுந்ததுமே உடனடியாக அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க தில்லைப்பட்டினம் கிராமத்திற்கே வந்துவிட்டார் சீமான்.

இறுதிசடங்கு
சீமான் நாகப்பட்டினம் கிளம்பிய செய்தி அறிந்து ஏராளமான நாம் தமிழர்களும் நாகப்பட்டினம் வர தொடங்கினர். தமிழகம் முழுவதும் இருந்து நாம் தமிழர் உறவுகள் குவிய ஆரம்பித்தனர்... அன்புச்செழியன் வீட்டிற்குள் நுழைந்ததுமே அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலை பார்த்து சீமான் கதறினார்.. கண்ணீர் விட்டு அழுதார்.. தலையில் அடித்து கொண்டு துடித்தார்... சீமான் இப்படி குமுறி குமுறி அழுததை யாருமே பார்த்திருக்க முடியாது.

அன்பு தம்பி
யாராக இருந்தாலும் உறவு முறை சொல்லி அழைப்பதும், கூப்பிடுவதும், அவர்களுக்கு அறிவுறுத்துவதும்தான் சீமானின் பழக்கம்.. முகம் தெரியாத உறவுகளாக இருந்தாலும் அவர்களை தன்னுடைய தம்பி, தங்கைகளாகவே பாவிப்பது சீமானின் குணம்.. இதில், தன்னுடனேயே எந்நேரமும் பயணித்து கொண்டிருந்த அன்புவின் மரணம் அவரை ரொம்பவே உலுக்கிவிட்டது.

சுடுகாடு
தன்னையும் அறியாமல் வெடித்து கதறிய சீமானை சுற்றி இருந்தவர்கள் தேற்றினர்... அது மட்டுமல்ல.. இறுதி சடங்கில் அன்புவின் சடலத்தை முதல் ஆளாக தூக்கினார் சீமான்.. தன்னை காரில் சுமந்த அன்புவின் சடலத்தை, தன் தோளில் சுமந்து இடுகாடு வரை சென்றார் சீமான்.. இதற்கு காரணம் சீமானை பொறுத்தவரை அன்பு வெறும் டிரைவர் மட்டுமில்லை. சீமானின் தேவைகளை குறிப்பறிந்து செய்து வரும் தம்பியாகவே அன்பு திகழ்ந்து வந்திருக்கிறார்.
எப்போதுமே சிரித்த முகத்துடன் காணப்பட்ட இந்த பிரியமான தம்பி அன்புவின் அதிர்ச்சி மரணத்தில் இருந்து சீமான் மீண்டு வர நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications