விடிய விடிய கொட்டிய மழை! வயல்களை சூழ்ந்த நீர்! வேட்டியை மடித்துக் கட்டி களமிறங்கிய தமிமுன் அன்சாரி!
நாகை: நாகை மாவட்டத்தில் நேற்றிரவு விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதோடு நெற்பயிர்களும் நாசமாகின.
பாதிக்கப்பட்ட வயல்களில் வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கிய நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை வருவாய் துறை அதிகாரிகளும், வேளாண் துறை அதிகாரிகளும் உடனே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், செய்தியாளர்களிடம் தமிமுன் அன்சாரி கூறியதாவது; ''அக்டோபர் இறுதியில் தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவ மழை , 25 நாட்கள் தாமதமாக தொடங்கி உள்ளது. நேற்று இரவு முதல் நாகை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வயல்களில் நீர் சூழ்ந்து விட்டது. நாகை செல்லூர் பகுதியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வயலில் இறங்கி பார்வையிட்டேன்.''
''நேற்று இரவு தொடங்கி 200 மில்லி மீட்டரை கடந்து மழை கொட்டியுள்ளது. 80 மில்லி மீட்டர் மழை பெய்தாலே இப்பகுதியில் வயல்கள் பாதிக்கப்படும்.
மேட்டூர் அணை திறக்கப்படாததால், தண்ணீரின்றி பயிர்கள் வளரவில்லை. நேரடி நெல் விதைப்பு மூலம் பயிரிட்ட பயிர்கள் போதிய அளவில் வளராததால், ஒரு நாள் மழையில் அவை மூழ்கி விட்டன.''
''வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் அவர் கூறுகையில், சம்பா சாகுபடிக்கான இன்சூரன்ஸ் செலுத்திட இன்று கடைசி நாள் ஆகும்.
ஆனால் தீபாவளி மற்றும் மழை காரணமாக விவசாயிகள் பணம் செலுத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு கூடுதல் அவகாசம் தர வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை/ வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிர் சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியையும் அரசு விரைவுப்படுத்தவுள்ளது.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications