முதலில் சந்தோஷ்.. அடுத்து கண்ணன்... அராஜக காம கொடூரன்கள்.. மொத்தமாக அள்ளிய நாகை போலீஸ்!

மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைதாகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

நாகை: நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டியே பள்ளி மாணவியை நாசம் செய்த என்ஜினீயர், அவரது நண்பரை போலீசார் மொத்தமாக கைது செய்து அள்ளி கொண்டு போனார்கள்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னஎரகலி தெருவை சேர்ந்தவர் சந்தோ‌‌ஷ்குமார்.. 25 வயதாகிறது.. இவர் ஒரு என்ஜினியர்.. சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய க்ளோஸ் ஃபிரண்டுதான் கண்ணன்... மயிலாடுதுறை அருகே அக்களூர் கிராமத்தை சேர்ந்தவர்.. 36 வயதாகிறது.. பைனான்ஸ் தொழில் செய்யும், இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். .

two men arrested under posco near Mayiladuthurai

இந்த நிலையில் சந்தோ‌‌ஷ்குமார், கடந்த ஒரு வருஷமாக மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார். ஒருநாள், அந்த மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்று இருந்த சமயம் சந்தோ‌‌ஷ்குமார் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.. ஆசைவார்த்தை காட்டி நெருக்கமாகவும் இருந்துள்ளார்.. ஆனால் அதை தன்னுடைய செல்போனில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து கொண்டார்.

சில நாட்கள் கழித்து, இந்த வீடியோவை மாணவியிடம் காட்டிய சந்தோ‌‌ஷ்குமார், திரும்பவும் ஆசைக்கு இணங்குமாறு சொல்லி இருக்கிறார்.. இதனால் மிரண்டும், பயந்தும் போன மாணவி வீட்டில் இதை பற்றி யாரிடமும் எதையும் சொல்ல காணோம்.. மாணவியை சந்தோஷ்குமார் இப்படி மிரட்டியே பலமுறை சீரழித்துள்ளார்.

இதனிடையே தான் மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் இந்த வீடியோவை சந்தோ‌‌ஷ்குமார், தன்னுடைய நண்பர் கண்ணனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.. அந்த வீடியோவை பார்த்த கண்ணன், நேரடியாக மாணவியின் வீட்டுக்கே போய் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மாணவி கத்தி கூச்சல் போடவும், அவரது அம்மா அங்கு வந்திருக்கிறார்... அவரை பார்த்ததும் கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டிருக்கிறார்.

இதற்கு பிறகுதான் மகளிடம் யார், என்ன என்று விசாரிக்க.. நடந்ததை எல்லாம் சொல்லி கதறி அழுதிருக்கிறார்.. ஆவேசம் அடைந்த பெற்றோர், இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை மகளிர் போலீசில் புகார் செய்ய.. சந்தோ‌‌ஷ்குமார், கண்ணன் இருவரையும் போக்சோவில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+