பெண்களுக்கு புருஷனாக நிற்போம்.. மேடையில் உளறிய தவெக செளந்தரராஜா.. கொடுத்தாரு பாருங்க விளக்கம்
நாகப்பட்டினம்: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. குறிப்பிடத்தக்க சில திட்டங்கள் அறிவித்தாலும், முதலமைச்சர் தவெக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் தவெக நிர்வாகியும், நடிகருமான சௌந்தரராஜா பெண்களுக்கு புருஷனாக துணை நிற்போம் என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.
நாகப்பட்டினத்தில் நடந்த தவெக நிகழ்ச்சியில் நடிகரும், தவெக நிர்வாகியுமான சௌந்தரராஜா பேசுகையில், "நீ என்ன ஊரு நான் என்ன ஊரு முகவரி தேவையில்லை மற்றும் என்ன தவம் செஞ்சுப்புட்டோம். அண்ணன் தங்கை ஆகிட்டோம்" என்று பாட்டு பாடி பேச்சை ஆரம்பித்தார். "இது நம் விஜய் அண்ணன் சொன்னது. இனி நம்ம அண்ணன் தான் முதலமைச்சர். நீங்கள் போகிற இடமெல்லாம் உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். நீங்க என்ன பண்ணாலும் உங்களுக்கு பின்னாடி பாதுகாப்புக்கு நாங்க நிற்போம்.

புருஷனா துணை நிற்போம்
அண்ணனா.. தம்பியா.. மாமனா.. புருஷனா எல்லாவாமும் நிற்போம். உங்க வீட்டு சொத்தா. அய்யய்யோ.. அதாவது உங்கள் கணவர். உங்கள் கணவர் உங்கள் பின்னாடி நிற்பார். உங்கள் அண்ணன் உங்கள் பின்னாடி நிற்போம். உங்கள் தம்பி உங்கள் பின்னாடி நிற்பார். ஆண்கள் பெண்களுக்கு பின்னாடி, உங்கள் உரிமைகளை பெறவும் சாதனைகளை செய்வதற்கும் ஆண்கள் நாங்கள் துணை நிற்போம்.
இதை வைத்து ட்ரோல் செய்வார்கள். பண்ணட்டும். உணர்ச்சிவசத்தில் பேசினேன். உணர்ச்சிவசப்படாதீங்கடா என அண்ணன் சொல்லுவாரு. பார்த்து பேசுங்கடா என்று கூறுவார். அக்கா தம்பியை பார்த்ததும் சந்தோஷத்தில் சொல்லிவிட்டேன். ஆண்கள், பெண்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பைதத்தான் சொன்னேன். இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பேசியவுடன் விமர்சனம் செய்வதற்கு என சிலர் வந்துவிடுவார்கள்.
ஆபாசநிதி
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அண்ணனை ஆபாசநிதி என்று கூட சொல்லலாம். நயினார் நாகேந்திரன், தஞ்சை எம்எல்ஏ துரை சந்திரசேகர் என பலர் வந்துள்ளனர். அவர் எல்லாம் நம் அண்ணனை விமர்சிக்குமளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. எங்கள் அண்ணனுக்கு நடிக்கவும் தெரியும். நடிக்காமல் உண்மையாக இருக்கவும் தெரியும். உங்களை மாதிரி பேசி நடிக்கும் ஆள் இல்லை அவர். சினிமாவில் கேமரா முன்பு மட்டும் தான் நடிப்பார்.
அவரை மாதிரி துரை நடித்து காண்பிப்பாராம். எங்கள் பெண் அமைச்சரை ஆபாசமாக, அசிங்கமாக மேடையில் பேசுகிறார். அந்த மேடையில் இருக்க கூடிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இதை கேட்டு சிரிக்கிறார்கள். இது எல்லாம் கேட்கும்போது உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் நியாபகம் வரமாட்டார்களா. உங்கள் அம்மா, தங்கை நினைவுக்கு வரவில்லையா. ஆபாசமாக இல்லாமல் நாகரீகமாக 10 நிமிடம் பேச முடியுமா.
பாத்ரூமில் 3 மணி நேரம்
எங்கள் மீது தவறு இருந்தால், குற்றம் செய்திருந்தால் நீங்கள் கேள்வி கேளுங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அமைச்சரையும் டார்கெட் செய்து, அசிங்கமாக பேசுவது எப்படி சரியாகும். எங்களுக்கும் பேசத் தெரியுமென சட்டமன்றத்தில் சங்கி அமைச்சர் என்று சொல்லி, சி.டி.ஆர் அண்ணனிடம் வாங்கி கட்டி கொண்டார். இனிமேலாவது நிறுத்தி கொள்ளுங்கள். போதும்.. பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்தால் தாங்க முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications
