நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாவ் சபாஷ்.. நம் கையே நமக்குதவி.. புயலில் வீழ்ந்த மரங்களை தாங்களே அகற்றும் இளைஞர்கள்!

சீரமைப்பு பணிகளில் இளைஞர்கள், மாணவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆயிரக்கணக்கானோர் மீட்பு முகாம்களில் தங்க வைப்பு | களத்தில் குதித்த இளைஞர்கள்- வீடியோ

    நாகை: பார்த்தார்கள் இளைஞர்கள்... நம் மக்களுக்கு இனி நாம்தான் என முடிவு செய்து மீட்பு பணியில் இறங்கி விட்டார்கள்.

    தமிழகமெங்கும் கஜா புயல் மிரட்டி எடுத்து விட்டது. இதனால் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக அவஸ்தைபட்டு வருகிறார்கள்.

    புயலால் வெகுவாக பாதிக்கப்பட்டது நாகை மாவட்டம்தான். எங்கு பார்த்தாலும் மழைநீர், வீசிக் கொண்டே இருக்கும் பலத்த காற்று, பெய்து கொண்டே இருக்கும் மழை, கரண்ட் கிடையாது, வெளியில் வர முடியாது, எங்காவது போகலாம் என்றால் ரோடு முழுக்க விழுந்து கிடக்கும் மரங்கள், கரண்ட் கம்பங்கள்.. என எல்லா பக்கம் முடக்கம்தான்!!

    கஜா புயலால்.. விடிய விடிய கன மழை.. முடங்கிப் போனது கொடைக்கானல்கஜா புயலால்.. விடிய விடிய கன மழை.. முடங்கிப் போனது கொடைக்கானல்

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    மாவட்ட நிர்வாகம் இது குறித்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு அளித்து வருகிறது. பாதிப்புக்குள்ளான மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

    சீர்செய்யும் பணி

    என்றாலும் நாகை மாவட்டம் மணக்குடி இளைஞர்கள், தாங்களாகவே களத்தில் குதித்து விட்டனர். தங்கள் பகுதிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், கரண்ட் கம்பங்கள் போன்றவற்றை சீர் செய்யும் பணியில் இறங்கி விட்டனர்.

    ஆளாளுக்கு அரிவாள்

    ஆளாளுக்கு அரிவாள்

    ஆளாளுக்கு கையில் அரிவாள்களை தூக்கி கொண்டு, விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் மும்முரமாக உள்ளனர். எல்லாருமே இளைஞர்கள்தான்.. சரிசெய்யும் பணிகளை செய்யுங்கள் என்று யாரும் இவர்களுக்கு உத்தரவிடவில்லை, வேண்டுகோளும் விடவில்லை.. தாங்களாகவே வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து கொண்டு தெருவில் இறங்கி விட்டனர்.

    மகிழ்ச்சியில் மக்கள்

    மகிழ்ச்சியில் மக்கள்

    மின்கம்பங்களை ஓரங்கட்ட தொடங்கி விட்டனர். இளைஞர்களை பார்த்ததும் மாணவர்கள் மற்றொரு பக்கம் படையெடுத்து விட்டார்கள். இளைஞர்களும், மாணவர்களும் மணக்குடியில் கள வேலையில் ஈடுபட்டு வருவதை பார்த்த அந்த பகுதி மக்கள் மழை தந்த இன்னலையும் தாண்டி மகிழ்ச்சியில் உள்ளனர்.

    English summary
    Youngsters removing the trees in the Manakkudi Village Nagai Dist.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X