வீட்டில் ரகசிய கேமரா.. படுக்கை அறை காட்சி வெளியீடு.. கைதான நாகர்கோவில் மாணவர்கள்.. பதிலால் ட்விஸ்ட்
நாகர்கோவில் : கல்யாணம் ஆன பெண்ணுடன் இளைஞர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 3 மாணவர்களை நாகர்கோவில் போலீசார்கைது செய்தனர். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால், இருவரையும் சிக்க வைக்க ரகசிய கேமராவால் வீடியோ எடுத்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த திருமணமான 35 வயதுடைய பெண் ஒருவர், 2 பிள்ளைகளுடன் வசித்து வாழ்ந்து வருகிறார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் குறிப்பிட்ட இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. அந்த இளைஞர் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் திருமணத்தை மீறி உறவில் இருந்த அந்த இளம் பெண்ணின் படுக்கை அறை காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர் கூறுகையில், " எனக்கு 6 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எனது படுக்கை அறை காட்சி வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்
எப்படி படுக்கை அறை காட்சிகள் வெளியே வந்தது என்று வீடு முழுவதும் சோதனை செய்தேன் படுக்கை அறையின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த இடைவெளியில் ஒரு சிறிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தேன். அந்த கேமராவை வைத்துதான் படம் பிடித்துள்ளார்கள்.
இதன்மூலம் மர்ம கும்பல் படுக்கை அறை காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி உள்ளனர். இதுதொடர்பாக எனக்கு சில நபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இத்தகைய அநாகரிகமற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அந்த வீடியோக்கள் மேலும் பரவாமல் தடுத்து அழிக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு குறித்து விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், வடிக்கை எடுக்கும்படி கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, படுக்கை அறை காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கும்பல் யார்? என தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு செய்த போது யார் யார் என்பது அம்பலம் ஆனது. அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 37), சுமேஷ் (20), நிகேஷ் (20) மற்றும் பிபின் (20) ஆகியோர்தான் குறிப்பிட்ட இளம் பெண்ணின் படுக்கை அறை காட்சிகளை வெளியிட்டது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நேற்று 4 பேரையும் அதிரடியாக கைது செய்தார்கள்.
இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இருவரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுமேஷ், நிகேஷ், பிபின் ஆகிய 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார். இதில் சந்தோஷ் மட்டும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளம்பெண்ணையும், இளைஞரையும் சிக்க வைக்க திட்டமிட்டு அந்த பகுதியை சேர்ந்த கும்பல் இந்த விபரீதத்தை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக கள்ளத்தொடர்பை கைவிடும்படி அந்த கும்பல் எச்சரித்திருக்கிறார்கள்.ஆனால் கல்லூரி மாணவர்களின் எச்சரிக்கையை அவர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இதனால் இளம்பெண்ணின் படுக்கை அறையில் ரகசியமாக செல்போன் கேமராவை வைத்து வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த காட்சியை தங்களுடைய வாட்ஸ்-அப் மூலம் பரப்பி உள்ளார்கள் என்பது போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications