ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. அதை விடுங்க.. அமெரிக்க உழவர் சந்தை எப்படி இருக்கும்?.. போலாமா! Video
நாகர்கோவில்: நம்ம ஊர் உழவர் சந்தை எப்படி இருக்கும்னு கேட்டா டான்னு பதில் சொல்லிருவோம். அமெரிக்காவில் எப்படி இருக்கும் தெரியுமா.
நம்ம ஊரு உழவர் சந்தை எப்படி இருக்கும், மீன் மார்க்கெட் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும். ஆனா அமெரிக்காவில் இருக்கும் உழவர் சந்தைகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி நமக்குள் கண்டிப்பா இருக்கும்.
அட அங்கேயும் இருக்குங்க உழவர் சந்தை. அதை பற்றி தான் பார்க்க போகிறோம் இந்த வார அனுபவம் புதுமை இந்த அமெரிக்கா பதிவில். பர்க்கலாமா, வாங்கபோகலாம் .

சூப்பர் சந்தை
இங்க நம்ம ஊர் மாதிரி இல்ல உழவர் சந்தை. அழகான பெரிய கூடாரம் . காய்கறிக்கு தனி கறிக்கடை தனி என்று பிரிவுகள். வாசலிலே அவசரத்துக்கு பணம் எடுக்க ஏ.டி.ம் எந்திரம் வரவேற்கிறது. குறிப்பிட்ட தொகைக்கு கீழே என்றால் பணமா கொடுங்க இல்ல கார்ட் ல ஜாலியா ஸ்வைப் பண்ணிட்டு போய்கிட்டு இருக்கலாம்.

குட்டி எந்திரம்
சில கடைகள் இன்னும் அட்வான்ஸ் வளர்ச்சி பெற்ற கடைகள் . கடைக்காரர் மொபைலில் ஒரு குட்டி எந்திரத்தை மாட்டி அதில் நம்ம கார்டை ஸ்வைப் செய்ய சொல்லுகிறார்கள் .

சூப்பர் மார்க்கெட் ஸ்டைல்
உழவர் சந்தை என்றாலும் கூட சூப்பர் மார்க்கெட் ஸ்டைல் தான் அப்படி ஒரு நடையை போட்டு உங்களுக்கு தேவையான காய்கறிகளை கவரில் அள்ளிப்போட்டு மொத்தமாய் எடுத்துட்டு பில் போட போனா போதும் .
ஒயின் டேஸ்ட் பண்ணலாமே
அது மட்டுமா ஒயின் டேஸ்ட் பண்ணலாம். ஒரு வகை அல்ல பல வகை என்பது சிறப்பு. ஒயின், தேன் , கேக், பழங்கள் என்று எல்லாவற்றிலும் நீங்க நாக்கில் சுவை பார்த்து வாங்கும் திருப்தி சூப்பர் என்பதை விட ஒரு ஜாலியான அழகான அனுபவம் தான் இந்த ஊரு உழவர் சந்தைகளை விசிட் அடிப்பது நீங்களே பாருங்க இந்த வீடியோவில்.... என்னடா இந்த ஊரு விவசாயிகள் இவ்வளவு ஸ்டைலா ஜீன் போட்டு கண்ணாடி போட்டு கலக்கறாங்களே னு நீங்க கண்டிப்பா நினைப்பீங்க..
அமெரிக்காவின் சுவாரஸ்ய பக்கங்கள் இன்னமும் தொடரும் இதுபோலவே.
-
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications