15 வயசு பிஞ்சுவை.. 2 வருஷமாக சீரழித்த மாஜி எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்.. இப்ப எஸ்கேப்.. போலீஸ் வலை!
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நாகர்கோவில் முன்னாள் எம்எல்ஏ தலைமறைவானார்
நாகர்கோவில்: 15 வயது சிறுமியை 2 வருஷமாக நாசம் செய்துள்ளார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்.. இப்போது இவர் தலைமறைவாக உள்ளதால், நாகர்கோவில் போலீசார் இவரை வலைவீசி தேடி வருகிறார்கள்... இந்த பாலியல் புகார் வெளியானதை அடுத்து, நாஞ்சில் முருகேசன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த சிறுமி அவள்.. 15 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் எங்கெங்கோ தேடி, கடைசியில் கோட்டார் போலீசில் புகார் தந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் பல பகீர்கள் வெளியே வந்தன.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்தான் தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்தார்
இப்படி 2 வருஷமாகவே முருகேசன் தன்னை சீரழித்ததாகவும், அவர் உட்பட பலரும் தம்மை பலாத்காரம் செய்ததாகவும் ஒரு அதிர்ச்சி தகவலை சொன்னார். இதையடுத்து நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. இந்த விஷயம் வெளியே வந்ததுமே நாஞ்சில் முருகேசன் எஸ்கேப் ஆகிவிட்டார்.
அவர் இப்போது எங்கே தலைமறைவாக இருக்கிறார் என தெரியவில்லை.. அதனால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாஞ்சில் முருகேசன் எப்படியும் வீட்டுக்கு வருவார் என்பதால், அவருக்கு சொந்தமான வீடுகளை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பாலியல் புகார் வெளியானதை அடுத்து, நாஞ்சில் முருகேசனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு அதில் தெரிவித்துள்ளது.
15 வயது சிறுமியை அதிமுக முன்னாள் எம்எல்ஏ, பலாத்காரம் செய்த சம்பவம் நாகர்கோவில் மட்டுமல்லாமல் அதிமுக வட்டாரத்தையே அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
நிலம் அபகரிப்பு.. அதிமுக MP தம்பிதுரைக்கு எதிரான வழக்கு! மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications