நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை, அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் செல்வாக்கு பெற்ற இடம். ஆனால், சமீப காலமாக, இங்கு பாஜக பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில், நாகர்கோவில் தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது அதிமுக. இதற்கு சொந்த கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
அதிமுக மகளிர் அணியினர், எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மகளிர் அணியை சேர்ந்த சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

தளவாய் சுந்தரத்தின் கேம்?
இந்த முறை, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியை பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மகளிர் அணியினர் கோரிக்கை வைத்து வந்தனர். நாகர்கோவில் தொகுதி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மொத்தமுள்ள 6 தொகுதிகளில், 5ஐ கூட்டணிக்கு ஒதுக்கியது அதிமுக. அதில் நாகர்கோவிலும் அடங்கும். கன்னியாகுமரி தொகுதி மட்டும் தளவாய் சுந்தரத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நியாயப்படி பார்த்தால் அவர்தான் பேசி, நாகர்கோவிலை வாங்கி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் வேண்டும் என்றே அதை செய்யாமல் தவிர்த்துவிட்டார் என்று மகளிர் அணியினர் விமர்சித்திருக்கின்றனர்.
பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு
எனவே தளவாய் சுந்தரத்தை எதிர்த்து மகளிர் அணியினர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும், கிழித்தெறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த முறை சீட் ஒதுக்கப்பட்டிருந்தால் அது மேரி கமலாபாய் அல்லது தாரதி சாம்சன் என இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
நாகர்கோவில் மட்டும் கிடையாது, அதிமுக வலுவாக உள்ள அவினாசி உள்ளிட்ட தொகுதிகளையும், எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஒதுக்கியிருக்கிறார். இது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications