பேஸ்புக் காதலை நம்பி சீரழிந்த நாகர்கோவில் கல்லூரி மாணவி.. காதலன், நண்பனால் பாலியல் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றி கருத்துக்களை பதிவிட்ட கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி காதலன் மற்றும் அவனது நண்பனை நாகர்கோவில் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி (ரம்யா), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தையும், கருத்துகளையும் அவ்வப்போது பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் பேஸ்புக் மூலம் ரம்யாவுக்கு ஆவரைக்குளத்தைச் சேர்ந்த ஏசுநேசன் என்பவர் நட்பாக பழகி உள்ளார். மாற்றுத்திறனாளியான ஏசுநேசன், ரம்யாவுடன் பேஸ்புக்கில் பலமணி நேரம் சாட்டிங் செய்து நட்பை மேலும் மேலும் வளர்த்துள்ளார்.

முதலில் மறுத்தார்

முதலில் மறுத்தார்

ஒருகட்டத்தில் ஏசுநேசன், காதலை ரம்யாவிடம் சொல்லியிருக்கிறார். முதலில் மறுத்த ரம்யா, பின்னர் ஏசுநேசனின் தொடர் வற்புறுத்தல் காரணமாக காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இருவரும் பேஸ்புக்கில் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

தனியாக சந்திக்க அழைப்பு

தனியாக சந்திக்க அழைப்பு

சில நாட்கள் காதல் வானில் சிறகடித்த ரம்யாவுக்கு நேரில் சந்திக்கலாம் என ஏசுநேசன் அழைப்பு விடுத்துள்ளார். காதலனின் வார்த்தையை நம்பி, ஆசையாக சென்ற ரம்யா, ஏசுநேசனுடன் காரில் சென்றுள்ளார். காரை அவரது நண்பன் ஆதீஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்..

காதலி வன்கொடுமை

காதலி வன்கொடுமை

ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே காரை நிறுத்தி விட்டு காட்டுக்குள் ரம்யாவை ஏசுநேசன் அழைத்துச் சென்றுள்ளார். ஏதும் அறியாத அப்பாவியாக காதலனுடன் சென்ற ரம்யாவை ஏசுநேசனும், அவரது நண்பன் ஆதீஷ்ம் இணைந்து, .வாயை துணியால் கட்டிவிட்டு, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இச்சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என எச்சரித்ததோடு,. நகைகளையும் பிடுங்கி கொண்டு, ரம்யாவை அவர்கள் அனுப்பி உள்ளனர்

போலீசில் புகார்

போலீசில் புகார்

தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் சொல்லி ரம்யா கதறி அழுத்துள்ளார். இதையடுத்து, நாகர்கோவில் மகளிர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பின்னர் வழககு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார். சுநேசனையும், ஆதீசையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். பேஸ்புக்கால் கல்லூரி மாணவி சீரழிந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+