அந்த சாரு எங்க அம்மாவை ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்.. அழுத சிறுவன்.. பதறிய நாகர்கோவில்!
செக்ஸ் விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

நாகர்கோவில்: "அந்த சாரு எங்க அம்மாவை ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் கதவை பூட்டிக்கிட்டார்" என்று அந்த சிறுவன் நடுரோட்டில் கதற ஆரம்பித்துவிட்டான்! இதனால்தான் இந்த விவகாரமே தொடங்கியது!!
நாகர்கோவில் அருகே அரசு தொடக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாகர் என்பவர். போன சனிக்கிழமையன்று காலையிலேயே ரொம்ப சீக்கிரமாக ஹெச்.எம். பள்ளிக்கு வந்துவிட்டார்.
அப்போது மற்றொரு ஆசிரியர் சுப்பையா என்பவர் ஒரு இளம்பெண்ணை அழைத்து கொண்டு பள்ளிக்கு வந்தார். அந்த இளம்பெண்ணுடன் அவரது மகனும் வந்திருந்தார். ஸ்கூல் என்றதுமே சிறுவனுக்கு பயம் அதிகமாகி விட்டது. அதனால் தன் தாயின் கையை கெட்டியாக இறுக பற்றி நின்று கொண்டிருந்தான்.

கதவை தாழிட்டார்
ஹெச்.எம். அந்த பெண்ணை தலையசைத்து கூப்பிடவும், திடீரென அந்த இளம்பெண் மகனின் கையை உதறிவிட்டு, அவர் பின்னாடியே போனார். இளம்பெண்ணை அழைத்து கொண்டு தனது ரூமூக்குள் ஹெச்.எம். போய்விட்டார். பிறகு கதவையும் உள்பக்கமாக சாத்தி விட்டிருக்கிறார். தன் கையை உதறிவிட்டு, கண் முன்னாடியே ஹெச்.எம். அறைக்குள் அம்மா சென்றுவிட்டதால் சிறுவன் பரிதவித்தான்.

அம்மா எங்கே?
தன்னை விட்டுவிட்டு எங்கே போய்ட்டாங்க என்று அல்லாடினான். நேரம் ஆக ஆக அம்மா வெளியே வராததால் அழ ஆரம்பித்துவிட்டான். இதனால் சுப்பையை ஆசிரியர், சிறுவன் அழுகையை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து வெளியே ரோட்டுக்கு கூட்டிட்டு வந்தார். ஆனால் வழியெல்லாம் பையன் அழுதுகொண்டே வந்தான். அங்கே ஒரு கடையில் டீ, பிஸ்கட் வாங்கி தந்தார்.

விக்கி அழுதான்
பையனுக்கு டீ, பிஸ்கட் கண்ணுக்கு தெரியவே இல்லை. ஊரே திரும்பி பார்க்குமாறு "அம்மா... அம்மா" என்று கதறி அழுதான். இப்படி விக்கி விக்கி பையன் அழவும், அங்கிருந்த கடைக்காரர்கள், ஆட்டோக்காரர்கள் எல்லாம் ஆசிரியரிடம் என்ன ஏதென்று கேட்டார்கள். அவரும் என்னமோ சொல்லி சமாளித்தார். ஆனால் பையன் அம்மா என்று சொல்லவும் பையனிடமே விஷயத்தை கேட்டார்கள்.

திரண்ட மக்கள்
அதற்கு சிறுவன், "அந்த சாரு எங்க அம்மாவை ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் பூட்டிக்கிட்டார்" என்று சொன்னான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கடைக்காரர்களும், ஆட்டோகாரர்களும், "அப்படியா, வா காட்டு.. உங்க அம்மா எங்க இருக்காங்கன்னு பாப்போம்" என்று சொல்லி ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள். பையனும் ஹெச்.எம். ரூமை காட்டினான்.

அதிகாரிகளிடம் புகார்
கதவை தட்டி தட்டி ஒருவழியாக அந்த ரூம் கதவு திறக்கப்பட்டது. பிறகுதான் ஹெச்.எம். வண்டவாளம் எல்லோருக்கும் தெரிந்தது. உடனே இது சம்பந்தமாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரணை நடத்தினார்கள்.

சஸ்பெண்ட்
அந்த விசாரணையில், சம்பவம் நடந்த சனிக்கிழமையன்று அந்த ஸ்கூல் லீவாம். எனினும் அன்றைய தினம் ஸ்கூலுக்கு வந்து அவர் இவ்வாறு நடந்து கொண்டது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது. பிறகு என்ன? ஹெச்.எம்-க்கு சஸ்பெண்ட் ஆர்டர்தான்!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications