நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலெக்டர் விழாவிலேயே காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு.. அமைச்சரை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவை மீறி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொடங்கி வைக்கும் விழாவிற்காக சாலைகளில் இருபுறமும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோரை வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகள் அமைப்பு. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

flex boards galore in minister function

சென்னையில் கட்அவுட் விழுந்து இளம் பெண் ஒருவர் பலியான சம்பவம் தமிழகம் முழவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வழக்கின் விசாரணையின்போது ஹைகோர்ட்டும் தமிழகம் முழுவதும் யாரும் கட்அவுட்கள் வைக்க கூடாது என நேற்று உத்தரவு பிறப்பித்தது.

ஹைடெக் முறையில் திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கை...!ஹைடெக் முறையில் திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கை...!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதயில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொடங்கி வைக்கிறார்.

flex boards galore in minister function

இதில் அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் அகியோரை வரவேற்று நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சுங்கான்கடை சந்திப்பில் இருந்து ஒரு கிமீ தூரம் உள்ள பொறியியல் கல்லூரி செல்லும் சாலையில் இருபுறமும் வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகளை அதிமுகவினர் அமைத்து உள்ளனர்.

இது உயர்நீதி மன்றம் உத்தரவை மீறிய செயல் எனபலரது கருத்துகளாக உள்ளது. நிலைமையை சுதாகரித்து கொண்ட ஆளூர் பேரூராட்சி நிர்வாக ஊழிர்கள் தற்போது பதாகைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Lot of Flex boards were erected fot welcome Minister in his Nagercoil function have recieved the opposition of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X