நான் வெளி நாட்டுப் பறவையா.. அப்ப தமிழிசை.. பொன் ராதாகிருஷ்ணனுக்கு வசந்தகுமார் பொளேர் கேள்வி!
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தன்னை வெளிநாட்டு பறவை என கூறும் பொன்னார் எங்கேயோ பிறந்து தூத்துக்குடியில் வேட்பாளராக இருக்கும் தமிழிசை எந்த நாட்டு பறவை என கூறுவார் என்று காங்கிரஸ் வேட்பாளரும், தமிழிசையின் சித்தப்பாவுமான எச். வசந்தகுமார் கேட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து குமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் பேசினார்.
அப்போது அவர் பொன் ராதாகிருஷ்ணன் சொன்னது எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். அவர் செய்ய மாட்டார் என்றும் போட்டுத் தாக்கினார். வசந்தகுமாரின் பேட்டியிலிருந்து...

மக்கள் விரும்புவது இதுதான்
வளர்ச்சி என்று சொல்லும் பொன்னார் வெறும் கல்லை மட்டும் நாட்டி விட்டு துறைமுகத்தை தொடங்க போவதாக கூறுகிறார். மீன் பிடி துறைமுகத்தை விரிவு படுத்தி ஒருங்கிணைந்த மீன் பிடி துறைமுகம் அமைப்பதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். இதனால் யாருக்கும் தொந்தரவு இல்லை யாரின் வாழ்வாதாரம் பாதிக்கா.

இந்து மாணவர்களுக்கு ஏமாற்றம்
ஜூலை போராட்டம் என கூறி இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வாங்கி தருவதாக பொன்னார் கூறினார் அதனை வாங்கி கொடுக்கவில்லை. ஆட்சியில் இருப்பவர் மோடி தான் பெரும்பான்மையை வைத்து எத்தனையோ சட்டத்தை அவர் நிறைவேற்றினார். மத்திய அரசு நினைத்து இருந்தால் ஏழை இந்து மாணவர்கள் கல்வி உதவி தொகை சட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம், ஆனால் பாராளுமன்றத்தில் ஒரு நாள் கூட இது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வரவில்லை.

எங்கே அந்த 15 லட்சம்
இளைஞர்களுக்கு வேலை, 15 லட்சம் வங்கியில் செலுத்துவோம் இந்த 3 கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் பொன்னாருடன் நேருக்கு நேர் விவாதம் செய்யலாம். குமரியில் விமான நிலையம் என கூறி திருநெல்வேலியில் கொண்டு சென்றவர் பொன்னார். மருத்துவ கல்லூரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உயர்த்துவேன் என கூறி விட்டு அதனை தஞ்சை மதுரையில் கொண்டு வருகிறார்.

2500 பேருக்கு வேலை கொடுத்துள்ளேன்
நான் அரசியலில் இருந்து சம்பாதிக்கவில்லை. தொழில் செய்து அரசியலில் ஈடுபடுகிறோம். 2500 நபர்கள் என்னிடத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றுகிறார்கள். 1500 கோடி வியாபாரத்தில் 370 கோடி வரி செலுத்துகிறேன். சொந்த உழைப்பின் மூலம் வரும் வருமானத்தை வைத்து ஏழைகளுக்கு உதவி செய்கிறேன்.

தமிழிசை எந்த நாடு
குமரிமாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தன்னை வெளிநாட்டு பறவை என கூறும் பொன்னார் எங்கேயோ பிறந்து தூத்துக்குடியில் வேட்பாளராக இருக்கும் தமிழிசை எந்த நாட்டு பறவை என்பதை கூறுவரா. தோல்வி நிச்சயப்படுத்தப்பட்டது தோல்வி பயத்தால் இல்லாததை எல்லாம் பொன்னார் சொல்கிறார். குமரி மக்களவை தொகுதியில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

ராகுல் பிரதமராகப் போகிறார்
மத்திய அரசு மிரட்டுவதற்காகவும் பழிவாங்கும் போக்கை வைத்து துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது. சிறிது நாட்களில் ராகுல் காந்தி பிரதமராக வருவார். அதன் பிறகு சரியான நபர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி, சென்னை துறைமுகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

கார்ப்பரேட் துறைமுகம்
குமரியில் வர்த்தக துறைமுகம் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை அளித்து மக்களை துன்புறுத்தி வர்த்தக துறைமுகம் கொண்டு வரக்கூடாது. அதானி போன்ற கார்பரேட்கள் பயன்பெற இது போன்ற வேலைகளை மோடி செய்கிறார். துறைமுகத்திற்கான பணிகளை மத்திய அரசு கைவிட்டு விட்டது, பொன்னார் தனது சுயநலத்திற்காக துறைமுகம் வரும் என் கூறுகிறார் அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும் என்ற மாய தோற்றத்தை உருவாக்குகிறார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications