சுரேஷ்குமாருக்கும்.. சுபாஷ் மனைவி வித்யாவுக்கும் "லவ்".. கொந்தளித்த கணவர்.. கடைசியில் 2 தற்கொலை!
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் போலீஸுக்கு அஞ்சி விஷம் குடித்த காதலன் இறந்த ஒரு வாரம் கழித்து கள்ளக்காதலியும் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரின் மனைவி வித்யா என்பவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் வித்யாவுக்கும், சுரேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

தாய்
இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்த வித்யா, சுரேஷ்குமாருடன் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சுரேஷ்குமாரின் பெற்றோருக்கு தெரிந்ததையடுத்து சுரேஷ்குமாரை கண்டித்து, அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர்.

3 மாத கர்ப்பிணி
இந்தநிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாருக்கு திருமணம் நடந்தது. தற்போது சுரேஷ்குமாரின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணத்திற்கு பிறகும் கள்ளக்காதலியை தொடர்பு கொண்டு அவரை சந்தித்து இருவரும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வந்தனர்.

வித்யா
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வித்யாவின் கணவருக்கு தெரியவந்ததையடுத்து அவர் வித்யாவை கண்டித்துள்ளார்.
இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாயமானார்கள். சுரேஷ்குமார், வித்யா இருவரும் மாயமானது குறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

கூடங்குளம்
போலீசார் இருவரையும் தேடி வந்தநிலையில் அவர்கள் இருவரும் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்ததும் சுரேஷ்குமார், வித்யா இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

இருவரும் பலி
இதனையடுத்து இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தநிலையில், கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். வித்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் அவரும் சிகிச்சை பாலனின்றி உயிரிழந்தார்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications