நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல்ஹாசனை பார்த்து இப்படி சொல்லிட்டாரே ராஜேந்திர பாலாஜி!

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி- வீடியோ

    நாகர்கோவில்: நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அதை வளரவிடுவது தமிழக மக்களுக்கே ஆபத்தாக போய் முடியும். வெளிநாட்டு தீய சக்திகளுடன் கமல்ஹாசன் கைகோர்த்துக்கொண்டுள்ளதை போன்ற சந்தேகம் ஏற்படுகிறது.

    Kamal Haasan party cant win a Panchayat election: Minister Rajendra Balaji

    ஏதோ தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல்ஹாசன் வேடமிடுகிறார். ஆனால், அது தேர்தல் களத்தில் ஒத்துவராது. அதிமுகவிற்கு எதிரி திமுக மட்டும்தான். கமல்ஹாசன் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது.

    எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை கண்டவர், ஆனால் கமல் மாளிகையில் இருந்து மக்களை பார்ப்பவர். தமிழகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 35 லட்சம் லிட்டர் என்பது இதுவரை தமிழகம் காணாத உச்சமாகும். இடைத்தேர்தலை கண்டு அதிமுக அஞ்சவில்லை, திருப்பரங்குன்றம் தொகுதி இயற்கையாகவே அதிமுகவின் எஃகு கோட்டை.

    மும்பையில் கொன்று புதைக்கப்பட்ட பிரபல மாடல்.. 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்.. திக் புலனாய்வு! மும்பையில் கொன்று புதைக்கப்பட்ட பிரபல மாடல்.. 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்.. திக் புலனாய்வு!

    இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

    சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், அரசியலில் நான் 8 மாத குழந்தையாக நிற்கிறேன். ஆனால், சிறுபிள்ளை என நினைத்து விடாதீர்கள். மக்களுக்காக பறக்கிறேன். வேட்டையாடி விளையாடுவது என் வேலை அல்ல என்றும், தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிப்பவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Minister Rajendra Balaji says Kamal Haasan party can't win a Panchayat election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X