Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் அந்த நடிகர் மகள்.. ஆபாச காசியின் வலையில் சீக்கி சீரழிந்தார்.. விஐபிகளுக்கும் தொடர்பா?

நாகர்கோயில் காசிக்கு அதிமுக புள்ளிக்கு தொடர்பு என கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: பெண்களின் ஆபாச வீடியோக்களை நாகர்கோயில் காசியின் செல்போனில் இருந்து கைப்பற்றிய போலீசார், அவரது கோழிப்பண்ணையில் இருந்தும் லேப்டாப்பை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஏற்கனவே நடிகரின் மகள் காசியின் வலையில் சிக்கி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் கட்சி பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.. அதனால் காசி விஷயம் பெரித்து பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    கோழி பண்ணையில் சிக்கிய காசியின் லேப்டாப்... பரபரப்பு தகவல்கள்

    நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி.. வயது 26.. சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார்.. படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார்.. ஆனால் இவர் படிக்கும்போதிருந்தே பெண்களிடம் நெருங்கி பழகி உள்ளார்.

    அந்த சமயங்களில் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து வைத்து கொண்டு, நாளடைவில் பணம் கேட்டு அப்பெண்களை மிரட்டி வந்துள்ளார். இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. முதல்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் காசி குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்யவும்தான் விஷயம் வெளியே வந்தது.

     வீடியோக்கள்

    வீடியோக்கள்

    இதையடுத்து, கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. இந்த விஷயத்தில் காசிக்கு 4 நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.. அவர்களையும் போலுசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

    புகார்

    புகார்

    "காசியால் ஏமாந்த பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களது ரகசியம் காக்கப்படும்" என மாவட்ட காவல்துறை அறிவிக்கவும் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவாக புகார் தந்து கொண்டுள்ளனர்.. பெண் டாக்டர், பெண் என்ஜினியர், உட்பட பலரும் புகார் அளித்துள்ளனர்.. பணக்கார வீட்டு பெண்களுக்கு வலை விரித்துள்ளார்.. இதில் ஒரு நடிகர் மகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லட்சக்கணக்கில் காசி ஏமாற்றி உள்ளார். தற்போது காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

     மோசடி

    மோசடி

    பெண்களை ஏமாற்றியே காசி 4 அடுக்கு மாடி கொண்ட வீட்டை கட்டி உள்ளார்.. நிறைய சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார்.. பெண்களை மிரட்டி வாங்கிய பணத்தை கந்து வட்டிக்கும் விட்டு சம்பாதித்துள்ளார்.. அதற்காக இளைஞர் ஒருவரிடம் ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அபகரித்தது தற்போது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் தன் புகாரில், "2 லட்சம் ரூபாய் காசியிடம் கடன் வாங்கியிருந்தேன்.. அதற்கு ஈடாக செக், என்னுடைய காஸ்ட்லி பைக் (ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750) ஒன்றையும் காசிக்கு தந்தேன்.. வாங்கிய கடனுக்கு வட்டி, அசல் ரெண்டையும் சேர்த்து தந்துவிட்டேன்.. ஆனால், என் செக் மற்றும் பைக்கை காசி திருப்பி தரவே இல்லை.. பைக்கின் ஆர்சி புக்கையும் தன் பெயருக்கு மாற்றி ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்' என்று தெரிவித்திருக்கிறார்.

     ஆன்லைன் புகார்

    ஆன்லைன் புகார்

    இதுதொடர்பாக வடசேரி போலீசார், மோசடி உள்பட 3 பிரிவுகளின்கீழ் காசி மீது ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். காசி மீது இதுவரை 2 பெண்கள் உட்பட 3 பேர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து 94981 11103 என்ற செல்போன் எண் அறிவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம், அவர்கள் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும், ஆன்லைனில் கூட புகார் தந்தால் போதும் போலீசார் சொல்லி உள்ளனர்.

     ரிசார்ட்கள்

    ரிசார்ட்கள்

    இதனிடையே, விஐபிக்கள், சிலரிடம் காசி நெருங்கி பழகி உள்ளார்.. அதில் சில கட்சி பிரமுகர்களும் அடக்கம் என்கிறார்கள்.. சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த விஐபிகளுக்கு ஹோட்டல்கள், ரிசார்ட்களும் உள்ளனவாம்.. நாகர்கோயிலில் இருந்து காரில் பெண்களை காசி இங்குதான் அழைத்து வருவாராம்.. இந்த ரிசார்ட், ஹோட்டல்களில் தங்க வைத்து மிரட்டிதான் ஆபாச படங்களையும் எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

     கோழிப்பண்ணை

    கோழிப்பண்ணை

    இதுதொடர்பான ஆதாரங்களும் கோழிப்பண்ணையில் சிக்கிய காசியின் லேப்டாப்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து விசாரணையும் தீவிரமாகி வருகிறது. அதனால் பொள்ளாச்சி சம்பவத்தைவிட இந்த காசி விஷயம் பெரிசாக உருவெடுக்கும் என்று தெரிகிறது.. காசி ஏமாற்றிய அந்த நடிகர் மகள் யார், தொடர்பில் இருந்த அந்த விஐபிக்கள், கட்சி பிரமுகர்கள் யார், யார் என்ற பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+