Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசை ஆசையா லாட்ஜ்ஜில் ரூம் போட்ட "ஹனிமூன்" ஜோடி.. ஈரத்தாலியுடன் கதறிய பெண்.. இப்படியும் ஒரு காதலா? ஐயோ

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: புதுமண தம்பதிகள் லாட்ஜில் ரூம் போட்டுள்ளனர்.. ஆனால், 3வது நாள் நடந்த அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியையே அதிர வைத்துவிட்டது.
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விஜய்.. 23 வயதாகிறது.. இவர் ஒரு சலவைத்தொழிலாளி.. ஆசாரிப்பள்ளம் பகுதியில் தள்ளுவண்டியை வைத்து, துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வருபவர்.

இவர் நேற்று பார்வதிபுரம் பகுதியில் உள்ள லாட்ஜில் ரூம் போட்டுள்ளார்.. பிறகு திடீரென சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்... விஜய் அப்போது விஷம் குடித்திருந்தார்.. அவருடன் இளம்பெண் ஒருவரும் இருந்தார்.

விஜய் விஜய்: இதுகுறித்து உடனடியாக வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், போலீசார் லாட்ஜூக்கு விரைந்து வந்தனர்.. சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜய்யை, மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் விஜய்யை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக உயிர் பிரிந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

Kanniyakumari man love issue and what happened in the nagaricoil lodge room

யார் அந்த பெண்: விஜய் எதற்காக விஷம் குடித்தார்? அவருடன் தங்கியிருந்த பெண் யார்? என்பதிலிருந்து விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.. விஜய்-யின் இஸ்திரி செய்யும் கடைக்கு, ஒரு பெண் வந்துபோவாராம்.. 31 வயதாகிறது.. ராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. இஸ்திரி செய்ய கடைக்கு வந்தவருக்கு, விஜய்யுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. ஆனால், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்..

எனினும், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. நாளடைவில் அந்த பெண்ணுடன் விஜய் நெருங்கி பழகினார்.. இருவரும் நிறைய இடங்களுக்கு சுற்றி திரிந்து ஜாலியாக இருந்துள்ளார்.. ஒருகட்டத்தில், இந்த விஷயம், விஜய்யின் பெற்றோர் காதில் விழுந்தது.
மகனை கண்டித்தார்கள்.. இப்படியெல்லாம் பழக கூடாது என்று அறிவுரை சொன்னார்கள்... அத்துடன் அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டித்து விடுமாறும் கண்டிப்புடன் சொன்னார்கள்.. ஆனால் விஜய்யால், அந்த பெண்ணை மறக்க முடியவில்லை... இன்னொரு பெண்ணை மணப்பதை காட்டிலும், ஆதரவற்று, கணவரை பிரிந்து நிற்கும் அந்த பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுத்தார் விஜய்.. இதை அந்த பெண்ணிடம் சொல்லவும், அவரும் மறுமணத்துக்கு சம்மதம் சொன்னார்.

லாட்ஜ் ரூம்: அதன்படி நாகர்கோவிலில் உள்ள கோவில் ஒன்றில், விஜய் அந்த பெண்ணுக்கு தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டார். பிறகு, 2 பேரும், கணவன், மனைவி என்று சொல்லி பார்வதிபுரம் பகுதியிலேயே, லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. இதற்கு பிறகு, அந்த பெண்ணை லாட்ஜிலேயே விட்டுவிட்டு, விஜய் மட்டும் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்றார்.. பெற்றோரை சந்தித்து பேசினார்.. அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் கூறினார்..

இதைக்கேட்டு பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. விஜய்யின் திருமணத்தையும் ஏற்க மறுத்தனர்.. இதனால் நொந்துபோன விஜய், வீட்டில் இருந்து கிளம்பி மறுபடியும் லாட்ஜூக்கு கிளம்பி உள்ளார்.. விஷத்தை குடித்துவிட்டு, லாட்ஜுக்குள் சென்றதுமே, அப்படியே மயங்கி விழுந்துள்ளார்..

லாட்ஜில் அலறல்: அப்போது அந்த பெண்ணிடம், "நம்மை இவங்க யாரும் சேர்ந்து வாழ விட மாட்டாங்க.. அதனால் நான் சாகப்போகிறேன்." என்றார்.. அப்போதுதான், விஜய் விஷம் குடித்த விஷயமே அந்த பெண்ணுக்கு தெரியவந்து கதறியுள்ளார்.. உடனடியாக கத்தி கூச்சலிடவும், அந்த லாட்ஜில் உள்ளவர்கள் விரைந்து வந்து, மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.. அதற்கு பிறகுதான் போலீசுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யை விட அந்த பெண் 7 வயது அதிகம் என்பதால்தான், அவரது பெற்றோர் இந்த கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம்.. கோயிலில் வைத்து தாலி கட்டியபோதும்கூட, தொடர்ந்து வீட்டுக்கு போனை போட்டு, தன் பெற்றோரை சமாதானம் செய்ய நிறைய முயற்சி செய்தாராம் விஜய்..

அவர்கள் சமாதானம் ஆகாததால்தான், நேரடியாகவே வீட்டுக்கு சென்று பேசினால், ஓரளவு புரியவைத்து, அவர்களின் சம்மதத்தை பெற்றுவிடலாம் என்று விஜய் நம்பினாராம்.. அதிலும் தோல்வியே அடைந்துள்ளார்.

வாயில் நுரை: கல்யாணம் ஆகி, 3 நாட்கள் அந்த லாட்ஜில்தான் இருந்திருக்கிறார்கள்.. பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்காததால், விஷத்தை குடித்து, 3வது நாளே, இறந்துவிட்டார்.. "நாம அடுத்த ஜென்மத்தில் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்" என்று அந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு, வாயில் நுரைதள்ளியவாறே விழுந்து இறந்துவிட்டார் விஜய்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+