கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் ரொம்ப முக்கியம்! கொட்டப்போகும் மழை!
கன்னியாகுமரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இரவு 10 மணி வரை இந்த மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் எச்சரிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது எனவும் இது, நவ.16ம் தேதிக்குள் புயலாக மாறும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. புயல் தமிழகத்திற்கு வருமா? வழக்கம் போல ஆந்திராவுக்கு போகுமா? என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை. புயல் உருவாகி நகரும் திசையை பொறுத்துதான் இது தீர்மானிக்கப்படும் என்று ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல 14-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
16-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
17-11-2026 மற்றும் 18-11-2026: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
19-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
