நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேந்திரிய வித்யாலாயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராமச்சந்திர சோனி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

nagercoil sexual abuse teacher

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பற்றி அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, பாலியல் தொல்லை அளித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனியை போலீசார் கைது செய்துள்ளனர்.

போக்ஸோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது வழக்குப் பதிந்து கைது செய்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+