Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமானை நான் பார்த்ததே இல்லை.. ஆச்சரியப்படுத்தும் கன்னியாகுமரி சுனில்.. அசத்தும் நாம் தமிழர்!

கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

    நாகர்கோவில்: "இதுவரை நான் தலைவர் சீமானைப் பார்த்ததே இல்லை.. அடுத்து வெற்றி சான்றிதழுடன் போய்ப் பார்க்கவுள்ளேன்".. நாம் தமிழர் கட்சிக்கு புதிய கெளரவத்தை சேர்த்து கொடுத்த சுனில் கூறிய பேச்சு இது.

    முற்றிலும் தன் கையை நம்பி கரணம் அடித்துக் கொண்டிருக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. மக்களை மட்டுமே நம்பி சிம்பிளாக பிரச்சாரம் செய்வது, மக்களை எளிமையாக அணுகுவது என அசத்திக் கொண்டிருக்கும் கட்சி. சீமான் என்றால் இன்று பெரிய பெரிய கட்சிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக மாறி நிற்கிறார்.

    இந்த நிலையில் அக்கட்சிக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்த மாவட்டம் என்ற பெருமையை கன்னியாகுமரி மாவட்டம் பெற்றுள்ளது.

    தேர்வு

    தேர்வு

    குமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார் சுனில். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இவர்தான், தேர்தல் அரசியலில் அக்கட்சிக்கு முதல் வெற்றியைத் தேடிக் கொடுத்தவர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் வரலாற்றில் சுனில் இடம் பிடித்து விட்டார்.

    வெற்றி

    வெற்றி

    வெற்றி பெற முடியாத கட்சி என்ற கேலி கிண்டல்களுக்கெல்லாம் சுனிலின் மூலம் முற்றுப் புள்ளி வைத்து விட்டது நாம் தமிழர் கட்சி. அத்தோடு மேலும் பலரும் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனர். இதை நாம் தமிழர் கட்சி உணர்ச்சிகரமாக அதே சமயம் அடக்கமாக கொண்டாடிக் கொண்டுள்ளது.

    சந்திக்கவே இல்லை

    சந்திக்கவே இல்லை

    இந்த நிலையில் சுனில் அளித்துள்ள ஒரு பேட்டியில் இதுவரை நான் தலைவர் சீமானை சந்தித்ததில்லை. வெற்றிச் சான்றிதழுடன் சீமானை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். கட்சித் தலைவரைக் கூட சந்திக்காத ஒருவர் தேர்தலில் நின்று வென்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது. கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டே நாம் தமிழர் கட்சியில் இணைந்தாராம் சுனில்.

    மீனவர் சமுதாயம்

    மீனவர் சமுதாயம்

    சுனில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பட்டதாரி இளைஞர்,. கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர். அவர் தேர்தலில் வீழ்த்தியிருப்பது பலம் வாய்ந்த அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை. ஆனால் குமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்ப்பு அலையில் சிலுவைதாசன் சிக்கி சுனிலிடம் வீழ்ந்து விட்டார்.

    ஆறுதல்

    ஆறுதல்

    வெற்றி பெற்றாலும் மமதை தலைக்கு ஏறாமல் அடக்கமாகவே இருக்கிறார் சுனில். அதை விட ஆச்சரியம் தோல்வி அடைந்த சிலுவை தாசனிடம் அவர் ஆறுதலாக பேசியதுதான். இது இன்னும் ஒரு ஆச்சரியம். மாற்றம் எப்போதுமே இப்படித்தான் சின்னத் சின்னதாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வியாபித்து விஸ்வரூபம் எடுக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+