Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்வாண வீடியோக்கள்.. வாட்ஸ்அப்பில் வலை.. இளம் பெண்களை கவிழ்த்த குமரி பாதிரியார்.. அம்பலமான லீலைகள்

இளம்பெண்களின் பிரச்னை குறித்து பேசி, அதற்கு தீர்வு சொல்வதுபோல அவர்களிடம் பாதிரியார் ஆண்டோ நெருக்கமாகியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்த பாதிரியார் ஒருவரின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இவர் எப்படி பெண்களை ஏமாற்றினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லையையொட்டி அமைந்திருப்பதால் கிருத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், மதபோதகர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார். இப்படியான புகார்களில் பலரும் சிக்குவது தினமும் நடந்து வந்தாலும், ஒரு மத போதகர் இந்த புகாரில் சிக்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பெனெடிக் ஆண்டோ பணியாற்றி வருகிறார்.

இப்படி இருக்கையில் திடீரென ஒரு சில நாட்களுக்கு முன்னர் இவரது லேப்டாப் திருடு போயுள்ளது. இது தொடர்பாக புகாரும் கொடுத்திருக்கிறார். இந்நிலையில்தான் ஆண்டோ பெண்களுடன் தனிமையில் இருக்கும் 'ரொமான்ஸ்' வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. இவர் பாதிரியாராக பணியாற்றி வந்த நிலையில், இவரிடம் பாவ மன்னிப்பு கேட்க ஏராளமான இளம்பெண்கள் வந்திருக்கின்றனர்.

பழக்கம்

பழக்கம்

அவர்களிடம் ஆண்டோ நைசாக பேசி பழகியிருக்கிறார். இவருடைய பாணி எடுத்தவுடன் நெருக்கமாக பழகுவதல்ல. மாறாக முதலில் பெண்களுக்கு நம்பிக்கை வரும் வரை அவர்களிடம் மொபைல் நம்பரைக்கூட இவர் கேட்டு பெறமாட்டாராம். இளம்பெண்களின் பிரச்னை குறித்து முதலில் விரிவாக கேட்டு தெரிந்துக்கொண்டு அதற்கான தீர்வை கொடுப்பதற்கு பதில் அதிலிருந்து இவர்கள் வெளியே வருவதற்கான வழிகளை மட்டும் சொல்வாராம். பெரும்பாலானோர் இவர் சொல்வதே சரி என அப்பிரச்னைக்கு எதிராக குரல் எழுப்பாமல் இவர் சொல்வதை கேட்டு அதிலிருந்து ஒதுங்கிவிடுவார்களாம். பின்னர் பிரச்னையிலிருந்து தப்பித்தது ஒரு பெரிய விஷயம் என்பது போல பேசி அப்பெண்களிடம் நெருக்கமாவாராம்.

நெருக்கம்

நெருக்கம்

இப்படிதான் மொபைல் எண்கள் பகிரப்பட்டிருக்கிறது. மொபைலில் முதலில் நட்பாக தொடங்கும் பேச்சுக்கள் நாளடைவில் காதல் வரை செல்லுமாம். இருப்பினும் கல்யாணம் பக்கம் போகாமல் ரூட்டை மாற்றி செக்ஸ் என்கிற டாப்பிக்கில் பேச தொடங்கிவிடுவார் என்று இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். ஆண்டோ பாதிரியார் என்பதால் அடிக்கடி வெளியில் பெண்களை சந்திக்க முடியாது. எனவே இரவு நேரங்களில் எப்போதாவது பெண்களை நேரில் சந்திப்பது. மற்ற நேரங்களில் வாட்ஸ்அப் வீடியோ காலில் காலத்தை தள்ளி வந்திருக்கிறார். வீடியோ கால் செய்வது மட்டுமல்லாது இந்த கால்களை ரெக்கார்ட் செய்துள்ளார்.

 நிர்வாண வீடியோ கால்

நிர்வாண வீடியோ கால்

இப்படி ரெக்கார்ட் செய்யப்பட்ட நிர்வாண வீடியோக்கள் அனைத்தையும் இவர் தனது செல்போனில் சேகரித்து வைத்திருக்கிறார். இப்படி வைக்கப்பட்ட படங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இவருக்கு பணத்தேவை ஏற்படும் போது இந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி பணத்தையும் மிரட்டி பறித்திருக்கிறார். இது ஒரு பக்கம் எனில் மறுபுறம் பெண்களை தனிமையில் சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். அதாவது இப்படி தனிமையில் சந்திக்கும் பெண்களிடம் தான் செய்யும் சேட்டையையும் அவர் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார்.

தலைமறைவு

தலைமறைவு


இந்த வீடியோவும் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் இளம் பாதிரியார் ஆண்டோ தலைமறைவாகியுள்ளார். புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நிர்வாண வீடியோக்கள் பரவியதால் ஆண்டோ தனது பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+