யார் அந்த நடிகர் மகள்.. கோழி பண்ணையில் சிக்கிய காசியின் லேப்டாப்.. பரபரக்கும் கோலிவுட்!

பெண்களை மிரட்டி பணம் பறித்த நாகர்கோயில் காசி மீது மேலும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச வீடியோக்களை காசியின் செல்போனில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், என்ஜினர் காசி மீது புகார் தந்த நிலையில் மேலும் ஒரு பெண் புகார் தந்துள்ளார்.. காசியால் ஏமாற்றப்பட்டவர்களில் நடிகரின் மகளும் ஒருவர் அடக்கமாம்.. அவர் யார் என்று தெரியவில்லை.. தன்னுடைய கோழிப்பண்ணையில்தான் ஆபாச வீடியோக்கள் நிறைந்த லேப்டாப்பை காசிமறைத்து வைத்துள்ளார்.. அந்த லேப்டாப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்!!!

Recommended Video

    கோழி பண்ணையில் சிக்கிய காசியின் லேப்டாப்... பரபரப்பு தகவல்கள்

    நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி.. வயது 26.. சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார்.. படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார்.. ஆனால் இவர் படிக்கும்போதிருந்தே பெண்களிடம் நெருங்கி பழகி உள்ளார்.

    அந்த சமயங்களில் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து வைத்து கொண்டு, நாளடைவில் பணம் கேட்டு அப்பெண்களை மிரட்டி வந்துள்ளார். இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. முதல்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் காசி குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்யவும்தான் விஷயம் வெளியே வந்தது.

    பெண்ணியம்

    பெண்ணியம்

    சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவாராம்.. ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டு வந்துள்ளார். பெண்ணியம் குறித்த கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிடம், இந்த கருத்துகக்ள பார்த்து பல பெண்கள் காசியிடம் விழுந்துவிட்டனர்.. அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையும் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்து வந்திருக்கிறார்.

    செல்போன்

    செல்போன்

    இதையடுத்து, கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. இந்த விஷயத்தில் காசிக்கு 4 நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.. அவர்களையும் போலுசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

    நெருக்கம்

    நெருக்கம்

    அப்போதுதான் காசிக்கு சில அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கமும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.. "காசியால் ஏமாந்த பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களது ரகசியம் காக்கப்படும்" என மாவட்ட காவல்துறை அறிவிக்கவும் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவாக புகார் தந்து கொண்டுள்ளனர்.. இதையடுத்து 25 மதிக்கத்தக்க பெண் ஒரு என்ஜினியர் ஒருவர் புகார் தந்தார். இப்போது இன்னொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.. இந்த பெண்ணையும் காசி ஏமாற்றியுள்ளார்.

    பணம் பறிப்பு

    பணம் பறிப்பு

    பிறகு தன்னுடைய அம்மாவுக்கு புற்றுநோய், பணம் மருந்து வாங்க வேண்டும் என்று கேட்டு லட்சக்கணக்கில் ஏமாற்றி உள்ளார். தற்போது காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் இன்னொரு மோசடியும் வெளியே வந்துள்ளது... பெண்களை ஏமாற்றியே காசி 4 அடுக்கு மாடி கொண்ட வீட்டை கட்டி உள்ளார்.. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் தரைதளம், முதல் தளம் மட்டும் கட்டிக்கொள்ளலாம் என அனுமதி தரப்பட்டிருந்தது.. ஆனால் காசியோ, வீட்டின் முன்பகுதியையும் ஆக்கிரமித்து, தரைதளம், முதல்மாடி, 2-வது, 3-வது, 4-வது மாடி வரை கட்டி உள்ளார்.

    நோட்டீஸ்

    நோட்டீஸ்

    இப்போது இதை இடிக்க நாகர்கோயில் மாநகராட்சி முடிவு செய்து அதற்கான நோட்டீஸையும் காசி வீட்டில் ஒட்டி உள்ளது. 5 ஆண்டுகளாகவே இப்படி பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார் காசி.. ஸ்கூல் பிள்ளைகள், காலேஜ் மாணவிகள், வேலை செய்வோர் என யாரையுமே விடக்காணோம்.. குறிப்பாக பணக்கார வீட்டு பெண்களுக்கு வலை விரித்துள்ளார்.. இதில் ஒரு நடிகர் மகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    லேப்டாப்

    லேப்டாப்

    மேலும் யார் யாரை ஏமாற்றினார், ஆபாச வீடியோக்கள் அத்தனையும் லேப்டாப்பில்தான் காசி வைத்துள்ளார்.. அந்த லேப்டாப்பை தன்னுடைய கோழிப்பண்ணையில் மறைத்து வைத்திருந்தார்.. அதனை போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.. 3 இலக்கம் கொண்ட பாஸ்வேர்ட் அதற்கு உள்ளதாம்.. அதை கண்டுபிடித்து லேப்டாப்பை திறக்கும் முயற்சி நடந்து வருகிறது.. அந்த லேப்டாப்பை திறந்தால்தான் காசியின் மொத்த வண்டவாளமும் தெரியவரும்..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+