12 பெண்களின் லிஸ்ட்.. கக்கினார் நாகர்கோவில் காசி.. நிர்வாண வீடியோக்களை லீக்செய்தது யார்.. பரபர தகவல்

12 பெண்களின் பெயர்களை நாகர்கோவில் காசி போலீசில் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: பெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளிநாட்டில் இருந்து வெளியிட்டு கொண்டிருப்பது காசியின் நண்பனாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. இந்நிலையில், சிபிசிஐடி-க்கு நாகர்கோவில் காசியின் வழக்கு மாற்றப்படும் என்று செய்திகள் வந்த நிலையில், அதனை காவல்துறை தரப்பு மறுத்துள்ளது.

Recommended Video

    Nagercoil Kasi : நிர்வாண வீடியோக்களை லீக்செய்தது யார்.. பரபர தகவல்

    நாகர்கோவில் காசி வழக்கு நாளுக்கு நாள் மண்டை காய்ந்து வருகிறது.. 26 வயதான காசி, சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை சீரழித்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    இந்த பெண்களிடம் மிரட்டி வாங்கப்பட்ட பணத்தில் சொத்தையும் வாங்கி குவித்துள்ளார். இவரது லேப்டாப்பில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் உள்ளதை வைத்து விசாரணை நடந்தது.. முதலில் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டது, பெரிசா எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை.

    புகார்

    புகார்

    இதையடுத்து 17 வயது சிறுமி தந்த புகாரின் அடிப்படையில் தற்போது 2-வது முறையாக 6 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது. சிறுமி புகார் தரவும், இன்னும் நிறைய சிறுமிகள் இவரால் பாதிக்கப்பட்டிருப்பார்களா என்பதை விசாரிக்கவே இந்த 2வது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

    உடம்பு பிடித்திருந்தது

    உடம்பு பிடித்திருந்தது

    அந்த விசாரணையில், "எத்தனையோ பேரை ஏமாத்தினேன்.. யார் யார்னு எப்படி லிஸ்ட் தருவேன்.. என் உடம்பு பிடிச்சு போய்தான் பெண்கள் என்னிடம் விழுந்தார்களே தவிர, நானாக யாரையும் ஏமாற்றவில்லை, கல்யாணம் செய்து கைவிடவும் இல்லை" என்றார். இப்போது அடுத்த தகவலாக, 12 இளம்பெண்களின் பெயர்களை காசி சொல்லி உள்ளாராம்.. இந்த 12 பேரின் பெயர்களையும் அவர் வாயிலிருந்து லேசில் பெற முடியவில்லை.. இந்த 12 பெண்கள் யார் என விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாம்.

    ஆபாச போட்டோக்கள்

    ஆபாச போட்டோக்கள்

    இதற்கடுத்ததாக, காசி போலீஸ் பிடியில் உள்ளபோது ஏராளமான நிர்வாண, ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. முதல்முறை காசியை விசாரித்தபோதே, ஒருசில ஆபாச வீடியோக்கள் வெளியாகின.. இதை யார் வெளியிட்டார்கள் என்ற தெரியவில்லை.. அதேபோல 2வது முறையாக விசாரணை நடத்தும்போதும், ஏராளமான பெண்களின் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகின..

    துபாய் கவுதம்

    துபாய் கவுதம்

    காசியின் 2 நண்பர்களில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள இன்னொரு நண்பன் மூலமாகத்தான் இந்த வீடியோக்கள் வெளியாகி இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.. அந்த நண்பன் பெயர் கவுதம்.. துபாயில் வேலை பார்த்து வருகிறாராம்.. வீடியோவில் இருப்பது எல்லாம் காசி மீது புகார் அளித்த பெண்கள் என்கிறார்கள்.

    விவரங்கள்

    விவரங்கள்

    அதனால்தான் புகார் அளித்த பெண்களும் அதிர்ந்துள்ளனர். இனிமேல் யாரும் காசி பற்றி எந்த புகாரும் தரக்கூடாது என்பதற்காகவே இதை காசி செய்திருக்கலாம் என்ற யூகமும் எழுந்துள்ளது. அதனால் அந்த நண்பரை பிடித்தால்தான் மேலும் விவரங்கள் தெரிய வரும் என்பதால், அவரை கைது செய்ய நடவடிக்கை தீவிரமாகிறது.

    சிபிசிஐடி

    சிபிசிஐடி

    இந்த சூழலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக திடீரென தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் காவல்துறை இந்த தகவலை மறுத்துள்ளது... காசி மீது இதுவரை வந்த எல்லா புகார்களையும் விசாரிக்க வசதியாக இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாகவும், அதனாலேயே இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    அதனால் அதற்கான உத்தரவு நகல் இன்னும் வரவில்லை என்கிறார்கள்... சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி, அது மறுக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை தந்து வருகிறது. காசி வழக்கு குறித்த விசாரணையில் நம் போலீசார் ஆரம்பத்தில் இருந்தே விழிப்புடனே இருந்து வருகிறார்கள்.. தீவிரமான விசாரணை மந்தமாகாமல் கவனமுடன் உள்ளனர்.. அதேசமயம், பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து புகார் சொல்லவும் கேட்டு கொண்டு வருகிறார்கள்.. எப்படியும் அனைத்து உண்மை தகவல்களையும் விரைவில் வெளி கொண்டுவந்து, காசி & கூட்டாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+