அடடே.. இது யார்னு தெரியுதா.. மொத்தம் 180 பெண்கள்.. இன்று எலும்பும் தோலுமாக.. அதிர வைக்கும் காசி!

நாகர்கோவில் காசி உடல் மெலிந்து காணப்படுகிறார்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: எப்ப பார்த்தாலும், கையில் புட்டியும், இளம்பெண்களுடனே சுற்றி திரிந்து கொண்டிருந்த காசி இன்று ஆளே அடையாளம் தெரியாமல் உருமாறிவிட்டார்.. வாட்டசாட்டமான உடம்பு, இன்று சுருங்கி, நலிந்து போய் காணப்படுகிறது!

நாகர்கோவில் சுகுனா சிக்கன் டீலர் மகன்தான் 26 வயசு காசி, இவர் ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் முதல் அந்த பெண்களின் அம்மாக்கள் வரை ஏமாற்றி உள்ளார்.. படித்து முடித்ததும் வேலைக்கு போகும் பெண்களை விரட்டி துரத்தி ஆபாச செயலில் ஈடுபடுத்தி பணம் பறித்துள்ளார். இதில் விஐபிக்களின் மனைவிகளும் அடக்கம்!

 போட்டோக்கள்

போட்டோக்கள்

காசி கைதானபோது, அவரது போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாயின.. கார்களில், காஸ்ட்லி பைக்குகளில் காசி உட்கார்ந்து போஸ் தந்தார்.. அவர் பக்கத்தில் பெண்கள் இருந்தனர்.. அவர்கள் தோள் மீது கை போட்டுக் கொண்டும், ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டும் இருப்பதுபோல அந்த போட்டோக்கள் இருந்தன..

கைது

கைது

இது சம்பந்தமாக முதன்முதலில் கைதாகி காசியை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது, காசியின் தெனாவட்டு லுக் சோஷியல் மீடியாவில் வைரலானது.. பக்கத்திலேயே போலீஸை வைத்து கொண்டு, கோர்ட்டில் நின்று கொண்டிருந்த பெண்களுக்கு, தன்னுடைய இரு கைகளாலும் ஹார்ட்ன் காட்டினார்.. முகத்தில் ஒரு பயமே இல்லாமல் இருந்தார்.. குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லை.. நடந்த தவறுகளுக்கும், அவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போலவே உட்கார்ந்திருந்தார். ஆனால், இப்போது மொத்தமும் அடங்கிவிட்டது.

வாழ்க்கை

வாழ்க்கை

கிட்டத்தட்ட 150 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்ததாக போலீசார் சொல்கிறார்கள்.. ஒரு கையில் புட்டி, ஒரு கையில் குட்டியுடன் சுற்றி கொண்டே இருப்பார் என்கிறார்கள் காசியை நேரில் பார்த்தவர்கள்.. இப்போது காசியின் நிலைமையே தலைகீழாகி உள்ளது.

 விசாரணை

விசாரணை

4 நாளைக்கு முன்பு, மேலும் ஒரு பெண் காசி மீது புகார் தந்திருந்தார்.. தன்னை காசி நாசம் செய்துவிட்டதாக சொல்லி, தன் தரப்பு புகாரை போலீசில் அளித்திருந்தார். அதனால் இது சம்பந்தமாக காசியை விசாரிக்க போலீசாரும் 5 நாள் காவலில் எடுத்தனர்... 5 நாளும் காசிக்கு "ஸ்பெஷல்" கவனிப்பாம்.. கோர்ட்டுக்கு மறுபடியும் அழைத்து வந்தபோது, மெலிந்து போய் இருந்தாராம்.

 எலும்பும் தோலுமாய்

எலும்பும் தோலுமாய்

கையில் ஒரு கட்டை பையை எடுத்து கொண்டு போனார்.. பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தார்.. முன்பு இருந்த உடம்பு இப்போது அவரிடம் இல்லை.. எலும்பும் தோலுமாக வந்த காசியை அங்கிருந்தோர் பார்த்தபடியே சென்றனர்.. ஆடிய ஆட்டமெல்லாம் இன்று ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+