மும்மத தலங்களையும் இணைக்கும் ஒரு ரயில்.. நிறைவேறியது குமரியின் கனவு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மும்மத ஸ்தலங்களையும் இணைக்கும் வகையில் நாகர்கோவில் முதல் நெல்லை மதுரை, திருச்சி, தஞ்சை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு நேற்று முதல் தனி ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிய ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இனிப்புகள் வழங்கி பயணிகளை வழியனுப்பி வைத்தனர்.

கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான வேளாங்கண்ணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்து வருகின்றனர். அதன்படி பயணம் செய்யும் பயணிகள் நாகர்கோவிலில் இருந்து நெல்லை அல்லது மதுரை சென்று அங்கிருந்தே வேளாங்கண்ணி செல்லும் நிலை இருந்து வந்தது.
அதே போன்று தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லவும் பக்தர்கள் சிரமப்பட்டு வந்ததனர். மேலும் திருச்சி ஸ்ரீரங்கம், தஞ்சை, நாகூர், உள்ளிட்ட மும்மத ஸ்தலங்களுக்கு செல்லவும் ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையை மாற்றி திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களை இணைத்து வேளாங்கண்ணிக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்தது வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சை மார்க்கத்தை இணைக்கும் வகையில் வேளாங்கண்ணிக்கு தனி ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்து இருந்தது.

அதன் படி நேற்று முதன் முறையாக நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் இயக்கப்பட்டது, அதன் படி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மாலை புறப்பட்ட இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர், மற்றும் பல்வேறு அமைப்பினர் இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த ரயில் தற்போது இயக்கப்படுவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர்கள் இதனை குமரி மக்களுக்கு அளித்த ரயில்வே நிர்வாகதிற்கு நன்றி தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications