Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருக்கமாக இருந்தேன்.. ஏமாந்துட்டேன்.. பெண் என்ஜினியர் கதறல்.. காசியிடம் சிக்கியோர் தொடர் புகார்

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர் காசி மீது மேலும் ஒரு புகார் பதிவாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்துள்ளார் காசி என்ற இளைஞர்.. ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியதால், பெண் டாக்டர் ஒருவர் காசி மீது புகார் தந்த நிலையில், தற்போது பெண் என்ஜினியர் ஒருவரும் போலீஸ் எஸ்பி ஆபீசில் புகார் தந்துள்ளார்... அரசியல் பிரமுகர்கள் சிலருடன் காசி நெருங்கி பழகியதால், இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    பள்ளி மாணவி முதல் டாக்டர் வரை... அதிர வைத்த நாகர்கோவில் காசி

    நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி.. வயது 26.. சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்தபோது, ஒரு பெண் டாக்டரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இது நெருக்கத்தை ஏற்படுத்தியது.

    காலேஜ் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்து கொள்வதாக பெண் டாக்டரை ஏமாற்றி, பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார்... அந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டார்.

    நாகர்கோயில்

    நாகர்கோயில்

    பிறகு படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார்.. அப்போது முதல் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்துள்ளர்.. பணம் தரவில்லையென்றால் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவதாகவும் சொல்லி உள்ளார்.. 5 லட்சம் ரூபாய் வரை பணம் தந்த பெண்டாக்டர் ஒரு கட்டத்தில் தொந்தரவு அதிகமாகவும், பணம் தருவதை நிறுத்திவிட்டார்.

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி

    இதனால் ஆத்திரம் அடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள், வீடியோவை, ஷேர் செய்ய ஆரம்பித்தார்.. அது அவரால் போலியாக உருவாக்கப்பட்ட பேஸ்புக், ட்விட்டர் பதிவுகள் ஆகும். இதை கொஞ்சமும் எதிர்பாராத பெண் டாக்டர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்தார். இதையடுத்து போலீசார் காசியை கைது செய்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது!!

    போட்டோக்கள்

    போட்டோக்கள்

    சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவாராம்.. ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டு வந்துள்ளார். பெண்ணியம் குறித்த கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிடம், இந்த கருத்துகக்ள பார்த்து பல பெண்கள் காசியிடம் விழுந்துவிட்டனர்.. அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையும் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்து வந்திருக்கிறார்.

    விசாரணை

    விசாரணை

    கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நண்பர்கள்

    நண்பர்கள்

    மேலும் காசியுடன் உள்ள ஆண் நண்பர்களை போலீசார் அடையாளம் கண்டனர்... அதனால் அவர்களுக்கும் இந்த ஆபாச வீடியோ, போட்டோக்களும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில், போலீசார் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.. சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர். அப்போதுதான் காசிக்கு சில அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கமும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.. அவர்கள் யார் என்ற விசாரணையும் நடக்கிறது.

    என்ஜினியர்

    என்ஜினியர்

    ஏற்கனவே பெண் டாக்டர் மட்டுமே புகார் கொடுத்தநிலையில், இப்போது இன்னொரு பெண்ணும் புகார் தந்துள்ளார்.. 25 மதிக்கத்தக்க அந்த பெண் ஒரு என்ஜினியர்.. ஆனால் ஆன்லைனில்தான் இந்த புகாரை எஸ்பி ஆபீசுக்கு அனுப்பு உள்ளார். அதில், "காசியிடம் இரண்டரை வருடமாக பழகினேன்.. நெருக்மாக இருதோம்.. அப்போது என்னை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டான்.. இவனை தானே கல்யாணம் செய்ய போகிறேன் என்று நினைத்து சும்மா இருந்து விட்டேன்.. இதற்கு பிறகு ஏதோ அவசர தேவைக்காக என்னிடம் நகை வாங்கினான்.

    அரசியல் தொடர்பு

    அரசியல் தொடர்பு

    கொஞ்ச நாள் கழித்து அந்த நகையை நான் திருப்பி கேட்டபோதுதான் எனக்கு சுயசுரூபம் தெரியவந்தது.. ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டவும், விலகியும் விட்டேன்.. காசி மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. இதையடுத்து இந்த இந்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... ஏற்கனவே பெண் டாக்டர், இப்போது பெண் என்ஜினியர் என ஒவ்வொருராக புகார் தர ஆரம்பித்துள்ளனர்.. இதனால் ஏகப்பட்ட வழக்குகள் இனி காசி மீது பாயும் என தெரிகிறது.. அரசியல் தொடர்பும் காசிக்கு இருப்பதால் விவகாரம் பெரிதாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+