4 வயது சிறுவனை கொலை செய்து.. பீரோவில் அடைத்து வைத்த கொடூர பெண்.. அப்படியே அரண்டு போன மக்கள்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தி 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட் . வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இவரது மனைவி சகாய சில்ஜா. இவர்களது மகன் ஜோகன் ரிஷி(4). ஒரு மகளும் உள்ளார்.

சிறுவன் மாயம்
ஜான் ரிச்சார்ட் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சகாய சில்ஜா குழந்தைகளுடன் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில்தனியே வசித்து வருகிறார். சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீரென ஜோகன் ரிஷி மாயமானான்.இதனால் பதறிப்போன தாய் சகாய சில்ஜா சிறுவனை பல இடங்களில் தேடினார். ஆனால் அவன் கிடைக்கவில்லை.

நகை அடகு கடைக்கு சென்றார்
இதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இதற்கிடையே சிறுவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமா என்ற பெண் அந்த பகுதியில் உள்ள நகை அடகு கடையில் நகையை அடகு வைக்க சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த கடைக்காரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பின்பு போலீசார் பாத்திமாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

பீரோவில் பிணமாக இருந்தான்
அப்போது சிறுவனை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோவில் கையில், வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் பிணமாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் கழுத்து மற்றும் கையில் ஒன்றரை பவுன் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக சிறுவனை கடத்திய பாத்திமா நகையை திருடி விட்டு சிறுவனின் வாயில் துணியால் கட்டி விட்டு பீரோவில் அடைத்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.

வீட்டை அடித்து நொறுக்கினார்கள்
பாத்திமாவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடினார்கள். சிறுவன் பிணமாக கிடந்த பீரோவை சுக்குநூறாக உடைத்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலை செய்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications