அவர்களால் சகித்துக் கொள்ள முடியலை.. அதான் எதிர்க்கிறார்கள்... பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: நாட்டு மக்கள் நலன் கருதி இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் பார்வையோடு பார்த்ததால் அவர்களால் ( எதிர்பவர்களால் ) சகித்துக்கொள்ள முடியவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் , புதிதாக பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்கவும் உள்ளார்.

இதற்காக விழா கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது...
இடைக்கால பட்ஜெட் என்பது மலிவான தேர்தல் அறிக்கை என ஸ்டாலின் கூறியது, மலிவாகி போனவர்களின் அறிக்கை. நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் போது ஆரம்பத்தில் எக்காளம் இட்டுக்கொண்டு இருந்த எதிர்க்கட்சிகள் மக்கள் திட்டம் அறிவிக்கும் போது சோர்ந்து சோர்ந்து படுத்துவிட்டனர்.
நாட்டு மக்கள் நலன் கருதி இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் பார்வையோடு பார்த்ததால் அவர்களால் ( எதிர்பவர்களால் ) சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்தால் இவர்களால் சகித்து கொள்ள முடியாது என்பதை காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகள் நிரூபித்துள்ளது.
பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி குறைந்தது 30 இடங்களில் வெற்றிபெறும். பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று கடந்த தேர்தலிலும் நாங்கள் கூறவில்லை இந்த தேர்த்திலும் அப்படித்தான்.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமருக்கு காங்கிரஸ் கட்சி கருப்பு கொடி காட்டும் என அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி முழுசாக கருப்பாக உள்ளது. இவர்கள் கருப்பு கொடி காண்பித்தால் வித்தியாசம் தெரியாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications