திடீரென இறந்த தம்பி.. மார்பில் சாய்ந்து உயிரை விட்ட அக்கா.. ரியல் பாசமலர் சம்பவம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசமலர் சினிமாவை நினைவூட்டும் விதமாக மாரடைப்பால் இறந்த அரசு பள்ளி ஆசிரியரான தம்பியின் மார்பில் சாய்ந்து உயிரை விட்டிருக்கிறார் அக்கா.
ஆசிரியரின் இறுதிசடங்கில் பங்கேற்க வந்த உறவினர்கள், அவரது அக்காவின் இறுதி சடங்கிலும் பங்கேற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காந்திநகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவர் இரணியில் மேல்கரை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் மாரடைப்பு காரணமாக அவ்வப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் வேணுகோபால் திடீரென மயங்கி கீழே விழுந்து, மாரடைப்பால் இறந்தார்.
அப்போது வேணுகோபால் இறந்த செய்தி கேட்டு கண்ணீர் மல்க வந்த தேரூர் பகுதியைச் சேர்ந்த அவரது அக்கா அம்பிகா வேணுகோபால் உடல் அருகே அமர்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார்.

திடீரென இறந்த தம்பியின் மார்பின் மேல் அம்பிகா மயங்கி விழுந்தார். தம்பியின் இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் பாசக்கார சகோதரி, தம்பியின் மார்பில் சாய்ந்து உயிரைவிட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications