'ஆன்சர் சொல்லவா?' 10ம் வகுப்பு தேர்வெழுத வந்த மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம்! தட்டி தூக்கிய போலீஸ்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 6ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. ஏற்கனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தேர்வுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வருகை தராமல் இருந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களையும் வரவழைப்பது என பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9,76,089 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 3,686 மையங்களில் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மட்டும் 116 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி தக்கலையில் தேர்வு எழுத சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தக்கலை அருகே உள்ள அரசு உதவிப்பெரும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் தேர்வெழுத 10ம் வகுப்பு மாணவிகள் வந்துள்ளனர். அப்போது தேர்வு அறையின் கண்காணிப்பாளராக அருமணை அருகே உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் வேலவன் என்பவர் நியமிக்கப்படடுள்ளார். இவர் தேர்வெழுதிக்கொண்டிருந்த மாணவி அருகே சென்று பேச்சு கொடுத்திருக்கிறார். பின்னர் மாணவியை தொட்டு பேசியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இதனையடுத்து தேர்வு முடிந்த பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் இயல்பாக இல்லாததை உணர்ந்த பெற்றோர் அவரிடம் என்ன பிரச்னை என்று விசாரித்துள்ளனர். மாணவி அழுதுக்கொண்டே தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர் வேலவனிடம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர். பின்னர் கல்வித்துறைக்கும், குழுித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வருவதற்கு பள்ளிக் கல்வித்துறை ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேர்வெழுத வந்த மாணவியிடம் ஆசிரியரே சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில், "மகள் வீட்டிற்கு வந்ததிலிருந்து அப்சட்டாக இருந்தார். நாங்கள் விசாரித்தோம். முதலில் அவள் எதையும் எங்களிடம் சொல்லவில்லை. நீண்ட நேரம் கேட்ட பின்னர்தான் விஷயத்தை எங்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து நாங்கள் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேள்வியெழுப்பினோம். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. எனவே நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இனி இதுபோன்று சம்பவம் நடைபெறாத வண்ணம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் கன்னியாகுமரியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications