பெற்றோருக்கே முதல் சல்யூட்... நெகிழ வைத்த கன்னியாகுமரி புதிய எஸ்.பியின் செயல்.. சூப்பர் வீடியோ
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக பொற்றுப்பேற்றுக் கொண்ட ஹரி கிரண் பிரசாத் முதன் முதலில் தனது தாய்க்கும் தந்தையக்கும் முதல் சல்யூட் அடித்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்து இருக்கிறார்.
Recommended Video
கடந்த 23 ஆம் தேதி 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் நியமிக்கப்பட்டார். இன்று நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹரி கிரண் பிரசாத் புதிய எஸ்.பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தனது தாய் தந்தையருக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் முதல் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். அவரது இந்த செயல் அங்கிருந்த சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் அதிகாரியான ஹரி கிரண் பிரஷாத், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 2018 ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகருக்கு துணை காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று இருக்கிறார் ஹரி கிரண் பிரசாத்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications