"அந்த" 4 ஓட்டுக்கள்.. பாஜகவுக்கு வாக்குகளை நைஸாக ஷிப்ட் செய்தது யார் தெரியுமா..ஆடிப்போன நாகர்கோவில்
நாகர்கோவிலில் பாஜகவுக்கு ஓட்டுப்போட்ட திமுகவினர்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் திமுக மேயர் சிறப்பாக பதவியேற்று கொண்டார்.. ஆனால், திமுகவை ஒட்டியே பாஜகவும் நாகர்கோவிலில் வாக்குகளை பெற்றுள்ளது.. அதுதான் தற்போது வெடித்துள்ளது.. அதற்கான காரணமும் வெளிவந்துள்ளது...!
நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதன் முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது.
52 வார்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டது.. தேர்தலில் பதிவான வாக்குகள் 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக - 32, பாஜக - 11, அதிமுக - 7, சுயேச்சை - 2 என வெற்றி பெற்றனர்.

திமுக
உறுப்பினர்கள் பலம் அதிகம் இருந்த திமுகவின் மேயர் வேட்பாளராக மகேஷ் போட்டியிட்டார்.. நாகர்கோவிலை பொறுத்தவரை, பாஜகவின் கோட்டையாக இதுவரை கருதப்பட்டு வந்த மண் ஆகும்.. முதல்முறையாக திமுகவை சேர்ந்த ஒருவர் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்கு உரியவராகி உள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மகேஷூக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

திமுக தொண்டர்கள்
திமுக தொண்டர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மகேஷுக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆஷா அஜித் செங்கோல் வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனை, மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி தோற்கடித்தார்.. அந்த வெற்றியை தான் இப்போது திமுக தன்வசப்படுத்தி உள்ளது..

சர்ச்சைகள்
எனினும், பாஜக இந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மகேஷ், பாஜக சார்பில் மீனா தேவி இருவரும் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகளும், பாஜக வேட்பாளர் மீனா 24 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள்.. அதாவது, தேர்தலில் வெறும் 11 இடங்களை மட்டுமே பெற்ற பாஜகவின் மீனா, மேயர் தேர்தலில் 24 வாக்குகள் பெற்றிருக்கிறார்.. இது எப்படி என்பது தெரியாமல், திமுகவினரே அதிர்ந்து போய்விட்டனர்.

திமுக
இந்த தேர்தலில், பாஜக, திமுக என இரு தரப்புமே மேயர் பதவிக்கு ரேஸில் இருந்தனர்.. இதைதவித, 2 சுயேச்சைகளின் ஆதரவைப் பெற இரு தரப்பினருமே கடுமையாக முயற்சித்தனர்.. அப்படியே 2 சுயேச்சைகளும் மீனாவுக்கு வாக்களித்திருந்தாலும், 20 வாக்குகள்தானே பெற்றிருக்க முடியும்? 24 வாக்குகள் எப்படி கிடைத்தது? அந்த 4 ஓட்டுக்கள் எப்படி கிடைத்தன? என்பதுதான் திமுகவின் குழப்பமாகி விட்டது..

ஹைலைட்
கடைசியில் பார்த்தால், அந்த 4 வாக்குகளும் திமுக தரப்பில் இருந்தே பாஜகவுக்கு ஷிப்ட் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.. திமுக மற்றும் கூட்டணிக்குள் உட்கட்சி பூசல் வேலை நடந்திருப்பதை அறிந்து திமுக நிர்வாகிகள் ஆடிப்போய்விட்டனர்.. ஆனால், மறைமுக தேர்தலில் வெற்றி பெற திட்டம் தீட்டியும்கூட, சுயேச்சை மற்றும் திமுக கவுன்சிலர்கள் சிலர் தன்வசப்படுத்தியும்கூட, பாஜக மண்ணை கவ்வியதுதான் இதில் ஹைலைட்..!












Click it and Unblock the Notifications