Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. வெடித்த காதல் விவகாரம்!

உடன்பிறந்த அக்காவை கொலை செய்த 17 வயது சிறுமி கைதானார்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: இளைஞரை காதலித்ததுடன் கர்ப்பமும் அடைந்துள்ளார் 17 வயது தங்கை.. இதை அக்கா மோனிஷா கண்டிக்கவும், ஆத்திரம் தாங்காமல் காதலனுடன் சேர்ந்து மோனிஷாவை தலைகாணியால் அழுத்தியே கொன்றுள்ளார் தங்கை! நாமக்கல்லில் நடந்த இந்த சம்பவம் குறித்து பல தகவல்கள் ஒவ்வொன்றாக தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன!!

நாமக்கல் கொசவம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பழனிசாமி... இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவருக்கு 2 மகள்கள்... மூத்த மகள் மோனிஷாவுக்கு 19 வயதாகிறது.. நாமக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் காலேஜில் 2-ம் வருடம் படித்து வந்தார். 2 வது மகளுக்கு மகளான 17 வயது.. ஒரு அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோர் இருவரும் கூலிவேலைக்கு சென்றுவிட, 2 மகள்களும் வீட்டில் இருந்தனர். மதிய நேரம் திடீரென மோனிஷாவின் அலறல் சத்தம் கேட்கவும், பதறிப்போன அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. அப்போது இளைஞன் ஒருவன் வீட்டில் இருந்து தப்பி ஓடுவதை கண்டு ஒன்றும் புரியாமல் பார்த்தனர்.. உள்ளே சென்று பார்த்தபோது, தங்கையின் கை கிழிக்கப்பட்டு ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. அதை பற்றி கேட்டதற்கு, தங்களுக்குள் சண்டை வந்ததாகவும், அதனால் 2 பேரும் மாறி மாறி கையை கிழித்து கொண்டோம் என்றும் சொன்னார்.

 மயங்கி விழுந்தார்

மயங்கி விழுந்தார்

அதனால் அக்கம்பக்கத்தினர் பெட்ரூமுக்கு சென்று பார்த்தனர்.. அப்போது மோனிஷாவின் கையும் கிழிக்கப்பட்டு, மூக்கு, முகத்தில் ரத்தம் வடிந்த நிலையிலும் மயங்கி விழுந்து கிடந்தார். இதனால் அக்கம்பக்கத்தினர் 2 பேரையுமே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று, பெற்றோருக்கும் தகவல் சொன்னார்கள். ஆனால் மோனிஷா வழியிலேயே இறந்துவிட்டார். இதனால் சிகிச்சையில் இருந்த தங்கையிடம் நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.

காதல்

காதல்

வீட்டில் இருந்து தப்பி ஓடிய இளைஞர் பெயர் ராகுல்.. ஒரே ஊர்.. 19 வயதாகிறது.. மோனிஷாவின் காலேஜில்தான் அவரும் படித்து வருகிறார். காலேஜுக்கு ஒரே பஸ்ஸில் செல்வது வழக்கம்.. மோனிஷாவை ஒருதலையாக ராகுல் காதலித்து வந்துள்ளார்.. இந்த காதலை மோனிஷா ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் ராகுல் அடங்கவில்லை.. அக்கா இல்லை என்றதும் தங்கையை காதலிக்க தொடங்கி உள்ளார்.

 நெருக்கம்

நெருக்கம்

சிறுமியும் விவரம் புரியாமல் ராகுலை காதலித்துள்ளார்.. வீட்டில் யாருமில்லாத நேரம் ராகுல் வந்து போயுள்ளார்... இருவரும் நெருக்கமாக இருந்தும் உள்ளனர்... இதில் சிறுமி கர்ப்பமாகிவிட இந்த விஷயத்தை பெற்றோரிடம் மோனிஷா சொல்லி இருக்கிறார். இதனால் தங்கைக்கும், ராகுலுக்கும் மோனிஷா மீது கோபம் இருந்துள்ளது. அதனால்தான் மோனிஷாவை கொல்ல 2 பேருமே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 தலைகாணி

தலைகாணி

சம்பவத்தன்று வீட்டிற்கு ராகுலை வரவழைத்ததும் தங்கைதான்.. பெட்ரூமுக்குள் படுத்து கொண்டிருந்தபோது மோனிஷாவின் காலை பிடித்துக்கொள்ள, அக்கா மோனிஷாவின் முகத்தில் தங்கை தலைகாணியை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி மோனிஷா மயங்கி, மூக்கிலும் ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது.. இதை பார்த்து 2 பேருமே பயந்துவிட்டனர்.. அதற்கு பிறகுதான் பிளேடு எடுத்து அக்காவின் கையையும், தனது கையையும் அறுத்து, சண்டையின் போது அறுத்துக்கொண்டதாக நாடகமாடி, அதற்கு பிறகு ஒப்பாரி வைத்து ஊரை கூட்டியுள்ளார்.

ஜெயில்

ஜெயில்

இது அத்தனையும் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீசார், தப்பி ஓடிய ராகுலையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதை பற்றி போலீஸ்தரப்பில் சொல்லும்போது, "மோனிஷாவின் வீட்டின் பக்கத்தில்தான் ராகுல் வீடும் உள்ளது.. நாமக்கல் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மோனிஷாவின் தங்கையும் ராகுலும் 4 வருஷமாக காதலித்து வருகிறார்களாம்.. ராகுல், மோனிஷாவின் தங்கைக்கு அண்ணன் முறை ஆவார்.

கோபம்

கோபம்

அதனால்தான் இந்த முறை தவறிய காதலை மோனிஷா அடிக்கடி தட்டிக்கேட்டு தங்கையை எச்சரித்து இருக்கிறார்.. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்து அந்த கோபத்தில்தான் 2வது மகளுடன் பெற்றோரும் பேசாமல் வெறுப்புடன் இருந்திருக்கிறார்கள். மோனிஷா உயிருடன் இருக்கும்வரை சேர்ந்து வாழ விடமாட்டார் என்று நினைத்துதான் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.. காதலியுடன் சேர்ந்து மோனிஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார் ராகுல்.

விசாரணை

விசாரணை

அதற்கு பிறகுதான் இருவரும் கொலையை மறைக்க மோனிஷாவின் இடது கையில் பிளேடால் அறுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி உள்ளனர். இந்த நாடகம் அத்தனையும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அம்பலமாகிவிட்டது. 2 பேரிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றனர்!! படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமானதோடு, சொந்த அக்காவையே தீர்த்துக்கட்டிய தங்கையின் சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அப்பகுதியில் விலகவில்லை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+