225 ஆடுகள்.. 3000 கிலோ மட்டன்.. விடிய விடிய நாமக்கல் கோயிலில் கறிவிருந்து.. ஆனாலும் ஒரேயொரு கண்டிஷன்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மலையாம்பட்டியில், பிரசித்தி பெற்ற மலையாள தெய்வமான பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.. பெண்களை முற்றிலுமாகத் தவிர்த்து, ஆண்கள் மட்டுமே ஒன்றுகூடி கிடா வெட்டி, பொங்கல் வைத்து கொண்டாடும் இந்த விசேஷமான வழிபாட்டு வீடியோக்கள், இணையத்திலும் வைரலாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகிலுள்ளது மலையாம்பட்டி கிராமம்.. இங்குள்ள பொங்களாயி அம்மன் கோயில் மலையாம்பட்டி கிராமத்தில், ஆலமரத்துக்கு அடியில் அமைந்தள்ளது.. இந்த மலையாள தெய்வமான பொங்களாயி அம்மன் கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெறும்.., இந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு, நேர்த்திக்கடனுக்காக, ஆடுகளை பலியிடுவது வழக்கம்.

Namakkal Pongalayi Amman Temple Temple Feast Tamil Nadu

100 வருடங்களுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த சமபந்தி விருந்தானது, சுற்றுவட்டாரத்திலேயே பிரசித்தி பெற்றது.. வருடா வருடம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சமபந்தி கிடா விருந்து படைக்கப்பட்டுகிறது..

நாமக்கல் பொங்களாயி அம்மன் கோயில்

திருவிழா ஏற்பாடு முதல் கறிவிருந்து வரை அனைத்து வேலைகளையும் ஆண்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். கோயிலுக்கு சொந்தமான பொருள்களைக்கூட பெண்கள் தொட அனுமதிப்பது கிடையாதாம். அதுமட்டுமல்ல, கோவிலுள்ள பகுதிகளில்கூட பெண்களை அனுமதிப்பதில்லையாம். இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

200 வருஷத்துக்கு முன்பு கெடமலையில், பொங்களாயி என்ற பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, அடைமழை பெய்துள்ளது. அப்போது பிரசவ வலியும் வந்துள்ளது. ஆனால், குடும்பத்தினர் யாருமே அப்பெண்ணுடன் இல்லாததால் அபயக்குரல் எழுப்பியிருக்கிறார். எனினும், இவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர், பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் யாருமே உதவிக்கு வரவில்லை.

சாபம் விட்ட கர்ப்பிணி பெண்

கடைசியில் வலி தாங்க முடியாமல் அங்குள்ள அரச மரத்தடியிலேயே விழுந்துவிட்டார். பிறகு 2 ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் அந்த குழந்தைகளுமே இறந்துவிட்டன.. தனக்கு யாருமே உதவி செய்யாததால்தான், 2 குழந்தைகளும் இறந்துவிட்டதாக நினைத்து பொங்களாயி சாபமிட்டுள்ளார்.

குழந்தை பாக்கியம் இல்லாமலும், பசி பட்டினியாலும் தவிக்க வேண்டும் என்று சாபம் விட்டு மலை மேல ஏறி சென்றுவிட்டாராம்.. அதற்கு பிறகு நிறைய பேருக்கு அந்த கிராமத்தில் குழந்தை பிறக்காமலேயே இருந்திருக்கின்றன.

கொல்லிமலையில் இருந்து கெடமலைக்கு போன மலைவாழ் சமூகத்தை சேர்ந்த ஒரு பாட்டி, மலையாம்பட்டிக்கு வந்தபோதுதான், பொங்களாயி விட்டு சென்ற சாபம் பற்றி ஊர் மக்களுக்கு சொல்லியிருக்கிறார். அந்த பெண்ணை அம்மனாக நினைத்து கும்பிட்டால், சாபம் தீரும் என்றும், இந்த பூஜையில பெண்கள் மட்டும் கலந்துக்கக்கூடாது. ஆண்களே எல்லா வழிபாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

தீர்வு சொன்ன பாட்டி - குழந்தை சத்தம்

அந்த பாட்டி சொன்னபடியே செய்தபிறகுதான், அந்த ஊர்ல குழந்தை சத்தமே கேட்டதாம். அப்போது முதல் ஆடி மாதம் திருவிழா நடந்து வருகிறது. இந்த பொங்களாயி அம்மனை மனமுருகி வேண்டிக் கொண்டால் தீராத திருமணத் தடைகள் அனைத்தும் உடனே விலகி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் ஆணித்தரமான நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேர சிறப்பு பூஜைகளுடன் மிக விமரிசையாக தொடங்கியது. விழாவையொட்டி பொங்களாயி அம்மனுக்கும், கணபதிக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆட்டுக்கிடாய்கள்

தொடர்ந்து, முறைப்படி பொங்கல் வைக்கப்பட்டு பூஜைகள் செவ்வனே நடத்தப்பட்டன. நள்ளிரவு வழிபாட்டின் தொடக்கமாக, முதலில் முறைப்படி ஒரு பெண் ஆடு பலியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக கொண்டு வந்திருந்த நூற்றுக்கணக்கான ஆட்டுக்கிடாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டப்பட்டன.

இரவு முழுவதும் கோவில் வளாகத்திலேயே கறி சமைக்கும் பணிகள் படு மும்முரமாக நடைபெற்றன. பக்தர்களின் வேண்டுதல்களுக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 225 ஆட்டுக்கிடாக்கள் வெட்டப்பட்டு, சுமார் 3,000 கிலோவுக்கும் அதிகமான ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது. அத்துடன் 500 கிலோவுக்கும் அதிகமான அரிசியைக் கொண்டு சுடச்சுட பொங்கலும் தயாரிக்கப்பட்டது.

விடிய விடிய சமபந்தி கறிவிருந்து

விடிய விடிய சமையல் பணிகள் நிறைவுற்ற நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரம்மாண்ட சமபந்தி கறிவிருந்து முறைப்படி தொடங்கியது. இந்த கறிவிருந்து காலை முதல் மதியம் 12.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்குபெற நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், பக்கத்து மாவட்டங்களான சேலம், கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே திரண்டு வந்திருந்தனர்.. கோவிலை சுற்றி நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒழுங்காக நின்று, தட்டுகளில் கறிவிருந்தை பெற்று ஆர்வத்துடன் சாப்பிட்டு சென்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+