நாமக்கல் அருகே சோகம்! தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு குழந்தைகள் பலி
நாமக்கல்: நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனியில் தண்ணீரில் விழுந்து தாய், 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பியை காப்பாற்ற அண்ணனும் இரு குழந்தைகளை காப்பாற்ற தாயும் தண்ணீர் தொட்டியில் குதித்ததால் மூவரும் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவருக்கு நிதின் ஆதித்யா என்ற 11 மாத ஆண் குழந்தையும், யாத்விக் என்ற 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் இந்துமதி வீட்டில் தண்ணீர் தொட்டியில் (சம்ப்) தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என பார்க்க இந்துமதி திறந்துவைத்தார். அது நிரம்புவதற்காக மூடியை மீண்டும் மூடாமல் அப்படியே விட்டுவிட்டார்.
அந்த இடத்தில் இந்துமதியின் குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 11 மாத குழந்தை நிதின் தண்ணீர் தொட்டியில் விழுந்தான். உடனே அங்கிருந்த யாத்விக், அந்த குழந்தையை பிடிக்க சென்ற போது அந்த குழந்தையும் விழுந்துவிட்டது.
இவர்களது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த இந்துமதி , குழந்தைகளை காப்பாற்ற தண்ணீர் தொட்டியில் குதித்தார். அதில் 10 அடிக்கு தண்ணீர் நிரம்பியிருந்ததால் மூவரும் மூச்சுத்திணறி பலியாகிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications